Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சனிப்பெயர்ச்சி நட்சத்திரபலன் (19.12.2017 – 26.12.2020) சனிப்பெயர்ச்சி நட்சத்திரபலன் (19.12.2017 – ... சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு எளிய பரிகாரம் சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
நலம் தரும் நள்ளாற்று பதிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
17:33

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால் சிரமம் ஏற்படாமலிருக்க,  திருநள்ளாறு ஈஸ்வரரையும், போகம் ஆர்த்த பூண்முலையாளையும் நினைத்து படிக்க
வேண்டிய பதிகம் இது.

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி ¡Àகிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும் போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி அந்நெறி செல்லென்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்கு காளி ஞான சம்பந்தன்
நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் இவைபத்தும்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே.

 
மேலும் துளிகள் »
temple
அசுரர்கள் தொல்லை தாளமுடியாத தேவர்கள், கயிலைநாதரான சிவனைச் சரணடைந்தனர். அவர்களின் குறை தீர்க்க ... மேலும்
 
temple
கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி ... மேலும்
 
temple
பொய் தகவல் இது. எங்கும், எப்போதும் திருட்டால் நன்மை உண்டாகாது. பிள்ளையாரை திருடினால் அது ... மேலும்
 
temple
அமாவாசையன்று காய், கனி, கிழங்கு, கீரை உணவு வகைகள் இடம்பெற வேண்டும். இதில் வாழைக்காய் முக்கியமானது. ... மேலும்
 
temple
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள்  குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.