Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் எது? சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல ... நலம் தரும் நள்ளாற்று பதிகம் நலம் தரும் நள்ளாற்று பதிகம்
முதல் பக்கம் » துளிகள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திரபலன் (19.12.2017 – 26.12.2020)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
17:19

வாக்கிய பஞ்சாங்கப்படி, சனிபகவான் இன்று காலை 9:59 மணிக்கு  விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு  பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி நட்சத்திரவாரியாக பலன் கணிக்கப்பட்டுள்ளது.  

அசுவினி: அஷ்டமச்சனியில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள். எண்ணமும், செயலும் புத்துணர்வு பெறும். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமை உண்டாகும்.  தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. வெளிநாட்டு பணிக்கான முயற்சி வெற்றி பெறும்.

பரணி: மனதில் நம்பிக்கை மேலோங்கும். உறவினரின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் பன்மடங்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். குநாள் நினைத்த மாற்றங்களைச் செய்வீர்கள். தந்தை வழி  பூர்வீக சொத்துக்களை கவனமுடன் பாதுகாக்கவும். புத்திரர் உறுதுணையாக செயல்படுவர். இளம் வயதினர்க்கு திருமண முயற்சி கைகூடும்.

கார்த்திகை-1ம்பாதம் – மேஷம்: அஷ்டமச்சனி விலகி முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவீர்கள். சொல்லும் செயலும் வசீகரமாக அமைந்திடும்.புதிய வீடு, வாகனம் வாங்கலாம். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் வளர்ச்சி  அதிகரிக்கும். புத்திரப்பேறு கிடைக்க அனுகூலம் உண்டாகும். எதிரிகள் உங்களின் வளர்ச்சி கண்டு பிரமிப்பர்.  திட்டமிட்டபடி சுற்றுலா செல்வீர்கள்.

கார்த்திகை-2,3,4- பாதம் – ரிஷபம்: அஷ்டமச்சனி காலம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் மனதிற்கு நிம்மதியளிக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிறருக்காக நகை, பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம்.

ரோகிணி: மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். தொழிலில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பெற்றோர் அன்பும், ஆசியும் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது.

மிருகசீரிடம்-1,2- – ரிஷபம்: அஷ்டமச்சனியால் நெருக்கடிக்கு ஆளாகலாம். மனக்குழப்பம் தீர வழிபாட்டில் ஈடுபடுவது அவசியம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. தாய்வழி உறவினரால் உதவி கிடைக்கும். தொழிலில் தடைகள் குறுக்கிட்டாலும் லாபம் சீராக இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். சிலர் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். குடும்ப நலனுக்காக ஒற்றுமை காப்பது நல்லது.

மிருகசீரிடம்-3,4- – மிதுனம்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை விழிப்புடன் பாதுகாப்பது அவசியம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். தடைபட்ட சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். தியானம், இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மைக்கு வழிவகுக்கும்.

திருவாதிரை: திட்டமிட்ட பணி  விடாமுயற்சியால்  நிறைவேறும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். சகோதரர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள்.  சுபநிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். தொழில் வியாபார முதலீட்டிற்காக  எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தேவை குறைவின்றி பூர்த்தியாகும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுவீர்கள்.

புனர்பூசம்-1,2,3- – மிதுனம்: பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். திடீர் செலவால் பண நெருக்கடிக்கு ஆளாகலாம். புத்திரர்களின் செயல்பாடு மனநிம்மதிக்கு வழிவகுக்கும். வீடு, வாகனத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு இடம் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். சொத்தின் பேரில் அதிக கடன் பெற வேண்டாம்.  பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.

புனர்பூசம்-4- –  கடகம்: ஆறில் சனி அமர்வதால் அளப்பரிய வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். உங்களிடம் விலகிச் சென்றவரும் விரும்பி அன்பு பாராட்டுவர்.

பூசம்: லட்சிய நோக்குடன் முன்னேறுவீர்கள். எதிரிகள் பலமிழந்து விலகுவர். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய கிளை துவங்க யோகம் உண்டாகும். மனைவியின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். உடல்நிலை திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். இளம் வயதினருக்கு திருமண முயற்சி வெற்றி பெறும்.

ஆயில்யம்: ஆறாம் இடத்து சனியால் ஆனந்த வாழ்வு அமையும். துணிவுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி அன்பு பாராட்டுவர். பூர்வ சொத்தால் ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டபடி புதிய வீடு வாகனம் வாங்குவீர்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகுவர். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புத்திரப்பேறு கிடைக்க அனுகூலம் உண்டாகும்.

மகம்: பூர்வ புண்ணிய சனியாக இருப்பதால் நன்மை கிடைக்கும். மனதில் தெளிவும் உடலில் வலிமையும் உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடைகளை புத்திசாலித்தனத்தால் சரி செய்வீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி  ஏற்படும். பிள்ளைகளிடம் இதமான போக்கை கடைப்பிடிப்பது நல்லது. பணவிஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

பூரம்: ஆடம்பர எண்ணம் மேலோங்கும். வரவுக்கேற்ப செலவை திட்டமிடுதல் அவசியம். பேச்சில் நிதானம் தேவை. வீடு. வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். புத்திரரின் பிடிவாத செயலை இதமாக சரி செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். நண்பர்களால் பிரச்னையை சந்திக்கலாம் கவனம். சொத்து, ஆவணத்தை பிறர் பொறுப்பில் தர வேண்டாம்.

உத்திரம்-1 – -சிம்மம்: வளர்ச்சிக்கான சூழல் உருவாகும். பேச்சு, செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனைவியின் விருப்பத்தை  குறைவாக மதிப்பிட வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.  பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

உத்திரம்-2,3,4-கன்னி: அர்த்தாஷ்டம சனியாக நாலாம் இடத்தில் அமர்கிறார். தாயின் அன்பும் ஆசியும் நன்மைக்கு வழிவகுக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாத்துக் கொள்ளவும். எதிரியால் இடையூறு ஏற்படலாம் கவனம். அதிக பயன் தராத பொருட்களை  விலைக்கு வாங்க வேண்டாம். புத்திரரின் செயல்பாட்டால் மனதில் நிம்மதி நிலைக்கும்.

அஸ்தம்: உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபரத்தில் விடாமுயற்சி தேவை. லாபம் சுமார். பிள்ளைகள் ஆடம்பர எண்ணமுடன் செயல்படுவர்.  குடும்ப நலன் கருதி மனைவியுடன் ஒற்றுமை பேணவும்.  நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு காண்பீர்கள். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.

சித்திரை-1,2 – -கன்னி: நான்காம் இடத்திற்கு சனி பெயர்வதால் செயலில் நிதானம் காப்பது நல்லது. கடந்த கால திட்டங்களை புதிய அணுகுமுறையுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் உங்களின் வழிகாட்டுதல்களை ஏற்று முன்னேறுவர். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பணவிஷயத்தில் விழிப்பாக இருக்கவும்.

சித்திரை-3,4 – -துலாம்: ஏழரைச்சனி விலகுவதால் மனதில் தைரியம் நிலைக்கும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நடந்தேறும். மங்கள நிகழ்ச்சி இனிதாக நடந்தேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும். லாபம் உயரும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவர். உறவினர்களிடம் இணக்கம் அதிகரிக்கும்.

சுவாதி: மூன்றாம் இடத்தில் சனி அனுகூலமாக உள்ளார். செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும். வசீகர பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உங்கள் ஆலோசனையால் சகோதரர் வாழ்வில் வளர்ச்சி காண்பர். தொழிலில் மூலதனத்தை அதிகப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு,வாகனம் வாங்க யோகமுண்டு.  உங்களின் வளர்ச்சி கண்டு எதிரிகள் வியப்பர். இளம் வயதினருக்கு திருமணம் நடத்த அனுகூலம் உண்டு.

விசாகம்-1,2,3 – -துலாம்: ஏழரைச் சனி பாதிப்பு விலகுவதால் நன்மை அதிகரிக்கும். பொன்,பொருள் சேரும். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி குறையும். வாடிக்கையாளர் ஆதரவால் லாபம் கூடும். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குவர். தந்தைவழி உறவினருடன் இணக்கம் அதிகரிக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.

விசாகம்-4 – -விருச்சிகம்: பேச்சு, செயலில் நிதானம் தேவை. திட்டமிட்டு செலவு செய்தால் கடன் பிரச்னையை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில்  லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை அவசியம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். வழக்கு விவகாரத்தில் விட்டுக் கொடுப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் தரும். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.

அனுஷம்: வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால், உங்களின் ஆலோசனையை விரும்புவோருக்கு மட்டும் சொல்வது நல்லது. செயல் நிறைவேற குலதெய்வத்தின் அருள் துணை நிற்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நவீன உத்திகள் மூலம் சாதனை இலக்கை அடைவீர்கள். எதிரிகளும் கூட  உங்களின் இனிய அணுகுமுறையால் மனம் திருந்துவர். தாய்வழி உறவினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

கேட்டை: ஆடம்பரச் செலவை தவிர்த்தால் நிம்மதியான வாழ்வு அமையும். நிதானித்து பேசுவது நல்லது. செயல் நிறைவேற நண்பரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்கநிலை மாறும். வழக்கு, விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நன்மையளிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம்.

மூலம்: ஜென்மச்சனி காலம் என்பதால் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.  செயலில் வெற்றி பெற நல்லவர்களின் உதவியை நாடுவது அவசியம். பூர்வீகச் சொத்தில் பணவரவு அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறுகளை குறுக்கிட்டாலும் சீரான வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

பூராடம்: ஜென்மச்சனியால் செயல்களில் குளறுபடியை சந்திக்கலாம். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். வீட்டுச் செலவில் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்ப்பாளரிடம் விலகுவதால் நிம்மதியை பாதுகாக்கலாம்.தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கடின உழைப்பு தேவை.  உடல்நலனில் கவனம் செலுத்தவும். தம்பதியர் இடையே  கருத்துவேறுபாடு அவ்வப்போது உண்டாகலாம்.  புத்திரர் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.

உத்திராடம்-1 – -தனுசு: சனியின் தாக்கத்தால் குளறுபடி உண்டாகலாம். சுயகவுரவம் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை தேவை. உறவினர் ஆதரவு நம்பிக்கையளிக்கும். பூர்வ சொத்தில் ஓரளவு வருமானம் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்கும். இளம்வயதினருக்கு திருமணம் கைகூடும்.

உத்திராடம்-2,3,4- – மகரம்:  விரயச்சனி என்பதால் பணியில் கூடுதல் கவனம் தேவை. பேசுவதில் நிதானம் கடைபிடிக்கவும். தாய்வழி உறவினரின் அன்பை குறைத்து மதிப்பிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சராசரி இலக்கை எட்டுவீர்கள். வீடு, வாகனத்தில் மராமத்துச் செலவு உண்டாகும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

திருவோணம்: ஏழரைச்சனியின் ஆரம்பம் என்பதால் இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு உங்களின் நலன் விரும்புவோரின் உதவி கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சமரச முயற்சி மேற்கொள்வது நல்லது. தம்பதியர் இணக்கமுடன் செயல்பட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தருவது கூடாது.

அவிட்டம்-1,2 – -மகரம்: ஏழரைச்சனி காலம் என்பதால் பொறுப்புடன்  செயல்பட்டால் சிரமத்தை தவிர்க்கலாம். கண்களின் பராமரிப்பில் உரிய கவனம் தேவை. தாய்வழி சொந்தங்களின் ஆதரவு நம்பிக்கை தரும். தொழில்,வியாபாரத்தில் மிதமான  பணவரவு கிடைக்கும். புத்திரர் வாழ்வில் மேம்பாடு அடைவர். உடல்நலனில் அக்கறை தேவை. குடும்ப பொறுப்பு உணர்ந்து  தம்பதியர் ஒற்றுமை பேணுவர். குலதெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னையை தவிர்க்க முடியும்.

அவிட்டம்-3,4 –கும்பம்: லாப ஸ்தான சனியால் நற்பலன் கிடைக்கும். பணிகளில் இருந்த தாமதம் விலகி முன்னேற்றம் உண்டாகும். மனதில் உற்சாகம் நிலைக்கும். சிலருக்கு அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். உறவினர்களின் அன்பைக் கண்டு நெகிழ்வீர்கள். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறக்க துணைநிற்பீர்கள். கடன் பிரச்னை மறையும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க அனுகூலம் உண்டு.

சதயம்: ஆதாய ஸ்தானத்தில் சனி இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம்  வாங்குவீர்கள். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். ஆரோக்கியம் மேம்படும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். நற்குணமுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவர்.

பூரட்டாதி-1,2,3- – கும்பம்: சனி பகவானின் அமர்வு  அனுகூலமாக இருப்பதால் ராஜயோகம் உண்டாகும். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வ அருளால் நல்வழியில் வெற்றி நடை போடுவீர்கள். பூர்வீக சொத்தில் பணவரவு அதிகரிக்கும். கடன் பெருமளவில் அடைபடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். மனைவியின் செயல்பாடு குடும்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பூரட்டாதி-4 – -மீனம்: முன்யோசனையுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. குடும்பநலன் கருதி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். தொழிலில் அவ்வப்போது இடையூறு குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். எவரிடமும் அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெறக்கூடாது. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.

உத்திரட்டாதி: விடாமுயற்சி இருந்தால்  மட்டுமே திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். புத்திரர்  செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. குடும்ப விவகாரத்தை மற்றவரிடம் பேச வேண்டாம்.தொழிலில் முன்னேற கிடைக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தவும். பயணத்தின் போது கவனம் தேவை.

ரேவதி: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வீடு, பணியிடத்தில் திடீர் இடமாற்றம் உண்டாகலாம். புத்திரரின் படிப்பு மற்றும் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். எதிரியின் மறைமுக திட்டங்களை சமயோசிதமாக வெல்வீர்கள்.  குடும்ப பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழிலில் இதமான அணுகுமுறையை பின்பற்றுவதால் இருக்கின்ற அனுகூலம் பாதுகாக்கலாம். குலதெய்வ வழிபாடு நன்மைக்கு வழிவகுக்கும்.

 
மேலும் துளிகள் »
temple
தண்ணீர்    - மன அமைதி
திரவியம்-    - தீர்க்காயுள்
சந்தனம்    - செல்வ வளம்
பால், பன்னீர்   ... மேலும்
 
temple
கும்பகோணம் உப்பிலியப்பன்-    - உப்பில்லாத பண்டம்
விராலிமலை முருகன்    - சுருட்டு
ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple
விஷ்ணு புராணம்    - திருமாலின் வரலாறு
பாகவதம்        - கண்ணனின் வரலாறு
நாரத புராணம்   ... மேலும்
 
temple
ஹந்த தே கதயிஷ்யாமி
திவ்யா ஹ்யாத்மவிபூதய:!
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய ... மேலும்
 
temple
இதுவும் பிரசாதம் தான். சிறுவர்கள் சாப்பிடுவது சிறப்பு. ஆனால் இதை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.