கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கும், மற்ற கோபுரங்களுக்கும் வித்தியாசம் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2018 03:01
"ஆலயம் புருஷாகாரம் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கோயிலை மனித வடிவாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். கருவறை – தலை; மகாமண்டபம் – மார்பு; பிரதான ராஜகோபுரம் – திருவடிகள். திருவடி தரிசனமே மிக உயர்ந்தது என்பதால் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என சொல்கிறோம். எனவே ராஜகோபுரம் என்பது தனிநிலை. மற்ற வாசல்களில் உள்ள கோபுரங்கள் கோயிலின் அமைப்பை பொறுத்து அமையும். இவைகளுக்கும் தனித்தனி சிறப்பு இருந்தாலும், எல்லாக்கோயில்களிலும் இவை இருப்பதில்லை.