பதிவு செய்த நாள்
22
ஜன
2025
12:01
கோவை; உ.பி.,யிலுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இன்று (ஜன.,22) கோதண்டராமருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதையொட்டி, கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்திலுள்ள, அபிநவவித்யாதீர்த்த மண்டபத்தில், சீதாராமர் கல்யாண வைபவம் வைதீக முறைப்படி நிகழ்த்தப்பட்டது. கோதண்டராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாச பட்டர் தலைமையில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. காலை 11:00 மணிக்கு, அபிநவ வித்யாதீர்த்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருள செய்து, பெண்பார்த்தல், நிச்சயதாம்பூலம், மாலை அணிவித்தல், திருமாங்கல்யதாரணம், மாலைமாற்றுதல், தேங்காய் உருட்டுதல், சூரியநமஸ்காரம், மொய்ப்பணம் சமர்ப்பித்தல், விருந்து பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும், பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6:30 மணிக்கு, டாக்டர் கணேஷின் நாமசங்கீர்தன பஜன் நிகழ்ச்சி நடக்கிறது.