பதிவு செய்த நாள்
22
ஜன
2025
01:01
மத்தியப் பிரதேசம்; மகா கும்பமேளாவையொட்டி, ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனத்தில் இருந்த புனித ஸ்தலமான மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் உள்ள உத்தராதி அஹோபில மடத்தில் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீநிவாஸ கல்யாணத்தை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பாக நடத்தியது.
முன்னதாக, திருமலை ஸ்ரீவாரி கோயில் முதன்மை அர்ச்சுகர் வேணுகோபாலன் தீட்சிதர் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாஸ சுவாமியை கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருள செய்தனர். பின்னர், காலை 11 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீ விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாச்சனம், கனக தாரணம், அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட ஐஸ்வர்ய வாத்தியங்கள் முழங்க அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ ஸ்வாமி அம்மாவா் திருக்கல்யாணம் சாஸ்திர முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அகலி சங்கல்பம், பக்த சங்கல்பம், மகா சங்கல்பம், மாங்கல்ய பூஜை, மங்கள சூத்ர தாரணை நடைபெற்றது. இறுதியாக சுவாமி அம்மனுக்கு நட்சத்திர ஆரத்தி மற்றும் மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் திருக்கல்யாணத்தை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ 1008 ராஜ் குரு பீடதீஸ்வர் சுவாமி பத்ரி பிரபன்னாச்சார்யாஜி மகராஜ், திருப்பதி தேவஸ்தான அதிகாரி குணபூஷண் ரெட்டி, பொக்காசம் பொறுப்பாளர் குருராஜா சுவாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.