மகா சிவராத்திரியன்று மாலையில் நடராஜரையும், பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். இரவின் முதல் ஜாம பூஜையில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் சந்திரசேகரரையும் (ரிஷபத்தில் பார்வதியுடன் எழுந்தருளியிருப்பவர்) வழிபட வேண்டும். அவர்கள் முன்பு சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு, தேவாரம், திருவாசகம் முதலான ¡Àகளை படிப்பது, மிகுந்த புண்ணியம் தரும்.