திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ளது கீரனூர் சிவலோகநாதர் கோயில். ஒரு முறை, தட்சன் யாகம் நடத்தியபோது அவனுக்காக முன்பே சென்ற அக்னி, அசுரர்களுக்கு அவிர்பாகத்தை (யாக பலன்) கொடுத்தான். இதனால், சிவன் கோபம் கொண்டு அவனை அழிக்க முயல, கிளியாக மாறி, அவன் மன்னிப்பு கேட்டான். பழைய உருவத்தை அவனுக்கு அருளினார். அறியாமல் செய்த தவறுக்கு, மன்னிப்பு வேண்டுபவர்கள் சிவலோகநாதரை வணங்கினால் விமோசனம் கிடைக்கும்.