சிவன் கோயிலில் கருவறைக்கு முன் ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்னும் துவாரபாலகர் இருவர் இருப்பர். ஆள் காட்டி விரலை மட்டும் நீட்டிய படி நிற்கும் ஆட்கொண்டார், சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என்பதை உணர்த்துகிறார். கையை விரித்தபடி நிற்கும் உய்யக்கொண்டார், சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடையத் தேவையில்லை என உணர்த்துகிறார். வழிபட வருவோருக்கு இதை உணர்த்துவதே இவர்களின் கடமை.