சிதம்பரம் நடராஜர் கோயிலில், தில்லைஅம்மன் சாந்த சொரூபிணியாக அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை கவனிக்கிறாள். அதே நேரம் தில்லை காளியாக, அமர்ந்து கொடிய செயல்களை தடுக்கிறாள். நமக்கு தீங்கிழைத்தவர்கள் பற்றி, தில்லை காளியிடம் புகார் கூறினால், மற்றதை அவள் கவனித்துக்கொள்வாள். இவளை பிரம்ம சாமுண்டீஸ்வரி என்றும் அழைப்பர்.