ஒரு மண் தொட்டியில் சுத்தமான மணல் நிரப்பி, அதன் மீது பசும்பாலில் ஊற வைத்த நவதானிய விதைகளை தூவ வேண்டும். தூவும் போது அம்பாள் குறித்த பாடல்களை பாட வேண்டும். முளைப்பாரி தொட்டியில் தூவப்பட்ட விதைகள் பச்சை பசேலென விளைந்தால் ஊர் செழிக்கும் என்பர். முறையாக வளர்ச்சி கண்டிருந்தால், நேர்ச்சை செய்தவரின் குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என நம்புவர். கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் முளைப்பாரி வைப்பது வழக்கம். இதை அங்குரார்ப்பணம் என்பர்.