நவக்கிரகங்களில் சூரியன் முதன்மையானவர். ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். இவர் முதல் ராசியான மேஷத்திற்கு வரும் நாளை, தமிழ் புத்தாண்டு என சொல்கிறோம். மேஷ ராசியில் சூரியன் உக்கிரமாவதை "அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை (மே4–-28) கத்திரி வெயில் இருக்கும். இந்த கால கட்டத்தில் மாரியம்மனுக்கு கஞ்சி படைத்து வழிபட்டால் மழை பொழியும் என்பது நம்பிக்கை.