புத்தாண்டு அன்று சுவாமி அறையில் பஞ்சாங்கத்தை வைத்து, அதற்கு பொட்டு, பூ வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் அனைவரும் கேட்கும்படி படிக்க வேண்டும். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக் கொண்டது. முதல் அங்கமான திதியை அறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான கிழமை பற்றி அறிவதால் நீண்ட ஆயுளும், முன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் முன்வினை நீங்குவதும், நான்காவதான யோகத்தை அறிவதால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமும், ஐந்தாவதான கரணத்தை அறிவதால் வெற்றியும் உண்டாகும்.