கல்பாக்கத்திற்கு அருகேயுள்ள வேப்பஞ்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பரமேஸ்வர மங்கலம். இறைவன் - வாஸ்து தேவபதி என்கிற சவுமிய தாமோதரப் பெருமாள். தாயார் வாஸ்து லட்சுமி என்கிற பூமாதேவி. தீர்த்தம் வாஸ்து தீர்த்தம் என்கிற க்ஷேத்ரபால தீர்த்தம். ஜாதகத்தில் வீடு, மனை யோகம் குறைவாக இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டால் வீடு, மனை வாங்கும் பாக்யம் கிட்டும். இத்தலத்திலிருந்து கொஞ்சம் மணலைக் கொண்டு சென்று புதிதாக வீடு கட்டப்போகும் பூமியில் இட்டு, அதன் பிறகு வீடு கட்டத் தொடங்கினால் தடையின்றி பணி நிறைவடையும் என்கின்றனர்.