குன்றத்துார் கருணாகர பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 10:01
குன்றத்துார்; குன்றத்துார் அருகே உள்ள கோவூரில், கருணாகர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், நன்கொடையாளர்கள் வாயிலாக புதுப்பித்து கட்டப்பட்டது. இதையடுத்து, கோவிலின் மஹா கும்பாபிஷேகம் விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.