பதிவு செய்த நாள்
20
ஜன
2025
10:01
அயோத்தி; அயோத்தியில் ஸ்ரீனிவாசருக்கு ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தானம் நேற்று நடத்தியது. திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமலை ஸ்ரீவாரி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ வேணுகோபாலன் தீட்சிதுலு தலைமையிலான அர்ச்சகர்கள் குழு, சரயு நதிக்கரையில் ஸ்ரீனிவாச சுவாமிக்கும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கும் ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்ச்சியை நடத்தினர். பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற மசாலாப் பொருட்களுடன் நடத்தப்பட்ட ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், ஐந்து சூக்தங்களான ஸ்ரீ சூக்தம், பூசுக்தம், நீல சூக்தம் மற்றும் புருஷ் சூக்தம் ஆகியவை படிக்கப்ட்டது. அபிஷேகத்திற்குப் பிறகு, ஸ்ரீனிவாசருக்கு துளசி மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, செயலாளர் ஸ்ரீராம் ரகுநாத் மற்றும் பிரபாகர் ரெட்டி, பொக்காசம் பொறுப்பாளர் குருராஜ சுவாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.