ஆடி பவுர்ணமியன்று குழந்தைகளுக்காக, பெற்றோர் விரதம் இருக்கலாம். குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து, காலை, மதியம் சாப்பிடாமல் இருந்து அருகிலுள்ள கோயிலில் விளக்கேற்றி வழிபடவேண்டும். இரவில் பழம் அல்லது மிதமான உணவைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். முடிந்தால் சகலகலாவல்லி மாலை பாடலை அல்லது சரஸ்வதி போற்றியை பாட குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஜூலை 27 ஆடி பவுர்ணமி மட்டுமல்ல ஆடிவெள்ளியும் கூட.