Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே ... சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய அரிய தகவல்கள்! சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய ...
முதல் பக்கம் » துளிகள்
குரு பூர்ணிமா (ஆடி பவுர்ணமி) வழிபாடும் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
குரு பூர்ணிமா (ஆடி பவுர்ணமி) வழிபாடும் சிறப்பும்!

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
02:07

ஆடி மாதப் பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள். முதல் குருவான வியாசரின் அவதார நாள். எல்லா மடங்களிலும் வியாசரை வணங்கி, மடாதிபதியிலிருந்து யாவரையும் பூஜித்து வணங்குவர். சீடர்கள் தங்களது முந்தைய- தற்போதைய குருவை வணங்குவர். பத்ரிநாத்திற்கு மேலே வியாசர் குகை, விக்ரகம் உள்ளது. அதற்கு மேலுள்ள குகையில் வியாசர் இன்றும் வாசம் செய்வதாகச் சொல்வர். ஆதிசங்கரர், மாத்வாச்சார்யர் போன்றவர்கள் வியாசரை தரிசித்து ஞானம் வளர்த்தனர். மார்க் கண்டேயர்போல் ஆதிசங்கரரின் வாழ்வு 16 வயதுதானாம். 32-ஆக மாற்றியவர் வியாசர் என்பர். ஆக, இந்து தர்மத்தினர் அவசியம் வியாச அவதாரத்தை மதித்து வணங்கி குருவருள் பெறவேண்டும். ஜைன, பவுத்த மதத்தினரும் குரு பவுர்ணமி அனுஷ்டிக்கின்றனர்.

குரு என்பது தத்துவம். உருவமாகவும் இருக்கலாம்; அருவமாவும் இருக்கலாம். ஸ்காந்த புராணம் சிவ -பார்வதி சம்பந்தமாக ‘குரு கீதை ’ என்று 300 துதிகளில் குரு மகிமையைக் கூறும்.

குரு என்பவர் யாரென்பதை அந்த சொல்லே விளக்கும்.
‘கு’ காரஸ்து அந்தகாரஸ்ச ’ ‘ரு’ காரஸ்தேன உச்யதே
அக்ஞான க்ராஸகம் ப்ரம்ம குருஏவ ந ஸம்ஸய:
‘கு’ என்றால் அக்ஞானம், அறியாமை, இருள், மடமை. ‘ரு’ என்றால் அதனை அழித்து, ஞானம், பிரகாசம், புத்தி, மனத்தெளிவு அளிப்பவர்.

யஸ்யஸ்மரண மாத்ரேண
ஞானம் உத்பத்யதேஸ்வயம்
ஏவம் ஸம்ப்ராப்யதே
தஸ்மைஸ்ரீ குரவே நம: எவரை நினைத்ததும் ஞானம், கல்வி தானாகவே உதிக்கின்றதோ அத்தகைய குருவை வணங்குகிறோம்.

காமிதஸ்ய காமதேனு காமனா கல்பதரவே
சிந்தாமணி சிந்திதஸ்ய ஸர்வ மங்களகாரகம்:
வேண்டியதை அருளும் காமதேனு, கல்பவிருட்சம், சிந்தாமணி போன்று குரு சீடர்களுக்கு எல்லா மங்களங்களையும் செய்வார்.

த்யான மூலம் குரோ மூர்த்தி:
பூஜா மூலம் குரோ பதம்:
மந்த்ர மூலம் குரோ வாக்யம்:
மோக்ஷ மூலம் குரோ க்ருபா:
(குரு உருவை தியானிக்க அருமையான துதி இது.) தியானிப்பதற்கு குருவின் உருவம்; பூஜைக்கு குருவின் பாதங்கள் அல்லது பாதுகை; குருவின் பொன்மொழிகளே மந்திரம்; மோட்சத்திற்கு வழி குருகிருபையே. எவருக்கும் எந்த குருவுக்கும் பொருத்தமான துதி. ஆகவே தத்துவம் என்றோம்.

திருமூலர் வாக்கு;
தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே.இனி கோயில்களிலுள்ள - புராணரீதியான குரு திருவுருவங்களை சிந்திப்போம்.


தட்சிணாமூர்த்தி: சிவ வடிவான இவரை கோயில்களில் கோஷ்ட உருவமாகக் காணலாம். இவர் மவுனகுரு, உபதேசம் மவுனத்தில் இவரது வலக்கை சுட்டுவிரலானது பெருவிரலைத் தொடும். மற்ற மூன்று விரல்களும் திறந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? மும்மலங்களை அழித்தல் என்பதே ஆத்மா (சுட்டுவிரல்) பரமாத்மாவை (பெருவிரல்) நாடினால் சாந்தம், சச்சிதானந்த நிலை கிடைக்கும். தட்சிணாமூர்த்தி உருவை ‘வ்ருத்தா சிஷ்யா, குரோர் யுவா’ என்று துதி கூறுகிறது. சனக, சனந்தன, சனாதன, சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்கள் வயதானவர்கள். குருவோ இளம்வயதினர். ஆத்ம ஞானம் அருளுபவர் தட்சிணாமூர்த்தி.


கும்பகோணம் அருகேயுள்ள சுக்கிரன் தலமான கஞ்சனூரிலுள்ள தட்சிணாமூர்த்தி ஒரு வைணவ சிறுவனின் கன்னத்தைத் தட்டி ‘நமசிவாய ’ எனும் பஞ்சாட்சரத்தை உபதேசித்தார். அந்த சிறுவன் ‘ஹரதத்தன்’ ஆனான். அனைவர் முன்னிலையிலும் அவன் கொடுத்த புல்லை கல் நந்தி உண்டது. கோயிலில் இந்த விவரம் காணலாம். (மேலும் நிகழ்ச்சிகள் உண்டு). ரமண மகரிஷியை தட்சிணாமூர்த்திக்கு ஒப்பிடுவர். அவர் பேசுவது அரிது. ஆதிசங்கரர், ஸோஹம், ப்ரம்மைவாஹம்- நான் பிரம்மன் என்றார் எனில், ரமணர், ‘கோஹம் -நான் யார் என்று விசாரி. அது ஸோஹம் என்பதில் ஆழ்ந்துவிடும் -ஜீவ பரம ஐக்கியமே என்பார்!

ஹயக்ரீவர்: இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆனால் பரவலாக அறியப்படும் பத்து அவதாரங்களிலும், பாகவதம் கூறும் 22 அவதாரங்களிலும்கூட உட்படாத வினோத அவதாரம். குதிரைமுக அசுரனை அழிக்க உதித்த குதிரை முக அவதாரம். சிவ தத்துவத்தில் தட்சிணாமூர்த்தி போன்று வைணவத்தில் ஹயக்ரீவர். சாக்த தத்துவமும் நிறைந்து. பிரம்மாண்ட புராணத்தில் லலிதா உபாக்யானம் உள்ளது. அதாவது லலிதா அவதாரக் காரணம். மன்மதன் தனது காமபாணத்தை சிவபெருமான்மீது செலுத்த, சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க மன்மதன் சாம்பலானான். பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் கேட்டுக்கொண்டதாலேயே மன்மதன் அவ்வாறு செய்தான். காரணம் சூரபத்மாதியரை அழிக்க முருகனின் அவதாரம் நிகழவேண்டும் என்பதற்காக. பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளை ஏற்று அவள் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவானென்று அருளினார் சிவன்.

பின்னர் ரதிதேவி அம்பிகையை வேண்ட, அவளருளால் மன்மதனின் சாம்பல் பண்டாசுரனாயிற்று. வேறுவிதமாகவும் கூறுவர். கணபதி மன்மதச்சாம்பலை ஒரு உருவமாக்க, தேவியின் பார்வையால் அது பண்டாசுரனாயிற்று அவனை வதம்செய்யவே லலிதா அவதாரம். லலிதாதேவியின் அவதார காரணத்தையும், துதிகளையும், சகஸ்ரநாமங்களையும் அகத்தியருக்குக் கூறினார் ஹயக்ரீவர். அப்போது அகத்தியர், ‘என் மனம் சாந்தியடையவில்லை சுவாமி. மேலும் ஏதேனும் கூறுங்கள்’ என்று வேண்டினார். அதற்கு ஹயக்ரீவர், ‘சீடனின் தகுதிக்கேற்றவாறே குரு போதிக்க வேண்டும். அகத்தியரே, நீர் விரும்பிக் கேட்டதால் கூறுகிறேன்’ என்று, வாசினி தேவிகள் கூறிய அதிரகசியமான லலிதா சகஸ்ரநாமத்தை அருளினார். தேவியின் சகஸ்ர நாமங்களில் மிக உன்னதமான சகஸ்ரநாமம் இது.

ஆக, அகத்தியரின் வேண்டுதலாலேயே நமக்கு உயர்ந்த லலிதா சகஸ்ரநாமம் கிடைத்தது. லலிதா சகஸ்ரநாமம் கேட்ட பின்பும் அகத்தியருக்கு பூரண சாந்தி, பூரண ஆனந்தம் கிடைக்கவில்லையாம். எனவே வெகுதயக்கத்துடன் ஹயக்ரீவரிடம், ‘இதற்குமேலும் வேறு ஏதாவது அதிரகசிய தேவிதுதி இருந்தால் கூறவேண்டும் ’ என்று வினயத்துடன் கேட்டார். அப்போது லலிதாதேவி மிக மகிழ்ந்து, ‘சிவ-சக்தி அட்சரங்களால் உண்டான பஞ்சதசாக்ஷரி மந்திரப்பூர்வக லலிதா த்ரிசதி உபதேசிக்கவும். அகத்தியர் அதனைப் பெற உகந்தவர். அவரது மனைவி லோபமுத்திரையும் சாக்த பக்தை ’ என்று கூற, ஹயக்ரீவர் ‘ஸர்வ பூர்த்திகரி’ என்னும் பரம ரகசியத் துதியை அகத்தியருக்கு உபதேசித்தார். சாக்த பக்தர்கள். ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு லலிதா சகஸ்ரநாமமும், த்ரிசதியும் பரம உன்னத சவுபாக்கிய நாமங்கள்.

ஹயக்ரீவர் மகிமையை உணர மேலும் இரு சம்பவங்களை சிந்திக்கலாம். ஸோதே மட மரத்வ சம்பிரதாய குரு வாதிராஜர் ஆழ்ந்த ஹயக்ரீவ பக்தர் ஹயக்ரீவர் விக்ரகத்துக்கு தினமும் கொள்ளுப் பயறை நிவேதனம் செய்வார். பூஜை முடிந்ததும் அறையின் கதவுகளை மூடிவிட்டு, கொள்ளுப் பிரசாதம் உள்ள தட்டை தன் தலைமேல் வைத்துக் கொள்வார் ஹயக்ரீவர் குதிரை ரூபமாக வந்து, முன்னிரு கால்களை அவர் தோள்மீது வைத்துக்கொண்டு உண்பாராம். வாதிராஜர்மீது பொறாமை கொண்ட சிலர் நிவேதனம் தயாரிப்பவரைத் தங்கள் வசமாக்கி, நிவேதனத்தில் விஷம் கலந்தனர். ஸ்வாமிகளுக்கு இது தெரியாது. வழக்கம்போல் பூஜை செய்தபிறகு கொள்ளு நிவேதனத்தைத் தலைமீது வைக்க, குதிரை வந்து உண்டுவிட்டுச் சென்றது. அந்நிலையில் அவர் பூஜிக்கும் பஞ்சலோக விக்ரகம் நீலநிறமாக மாறிவிட்டது. வியந்த அவர் ஹயக்ரீவரை தியானிக்க, உண்மை வெளிப்பட்டது. தவறு செய்தவர்களை அழைத்து அறிவுரை கூறினார். பின்னர் வாதிராஜர் நடந்ததற்கு ஹயக்ரீவரிடம் மன்னிப்பு கோர, நீலநிறமான விக்ரகம் சுயநிலைக்கு வந்ததாம்.

மற்றொரு சம்பவம்

வேதாந்த தேசிகர்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழா கடந்த வருடம் கொண்டாடப்பட்டது. ராமானுஜருக்குப் பின் வைணவம் தழைத்தோங்கக் காரணம், திருப்பதி வேங்கடேசன் அருளால் பிறந்த வேதாந்த தேசிகரே ஆவார். அவரது 750 -ஆம் வருடம் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த தூப்புல் எனும் தலம் காஞ்சி வரதராஜர் கோயிலுக்கு அருகே உள்ளது. அவர் கருடமந்திரம் ஜெபிக்க, கருடன் பிரசன்னமாகி, ஹயக்ரீவரை ஆழ்ந்து வணங்கச் சொன்னது அவ்வாறே அவர் திருவஹீந்திரபுரம் மலையில் தவம் செய்ய, ஹயக்ரீவ தரிசனமும் விக்ரகமும் கிடைத்தது. இன்றும் அந்த விக்ரகம் உள்ளது. ஹயக்ரீவர் ஞான ஸ்வரூபியாதலால், பல வைணவத் துதிகளை தமிழிலும், வடமொழியிலும் செய்துள்ளார் தேசகிர். வைணவ சம்பிரதாயத்திற்கு அவை ஒரு பெரிய பொக்கிஷமே! அவர் கிரகஸ்தரே நூறு வயது வாழ்ந்தவர். அவரது ஹயக்ரீவர் துதி ஒன்றைக் காண்போமா.

ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

‘ஸ்படிகம் போன்ற நிர்மல மனதுடையவர்’ எல்லா கலைகளுக்கும் ஆதாரமானவர்; ஞானானந்தமயமான அந்த ஹயக்ரீவரை வணங்குகிறேன்; மேற்கண்ட துதியைச் சொல்லி ஹயக்ரீவரை வணங்கினால் கல்வி, கலை, கவித்துவம், ஞானம் என யாவும் சித்திக்கும். அர்ஜுனன் மனக்குழப்பத்தால் கண்ணன் உபதேசமாக நமக்கு பகவத்கீதை கிடைத்தது. பக்தி, ஞானம், வைராக்கியம், கர்மம், யோகம் எல்லாம் போதிக்கிறது. அது உலகப்பிரசித்தம் 12 வெளிநாட்டு மொழிகளில் செய்யப்பட்டுள்ளது. உலகில் - இந்தியாவில் பல்வேறு மொழிகளில் சுமார் 1,300 வியாக்யானங்கள் (விரிவுரை) உள்ளதென்றால் அது பகவத் கீதைக்கு மட்டுமே.

எனவே ஜகத்குரு கிருஷ்ணர்மீது ஒரு துதி.

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜ கத்குரும்;
‘வசுதேவ - தேவகி மைந்தன்; கம்சன், சாணூரன் போன்ற அசுரர்களை வதைத்தவன்; ஜகத்குருவான கிருஷ்ணனைப் பணிகிறேன் ’.

தத்தாத்ரேயர்: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிய ரூபம் தத்தாத்ரேயர். ஆறு கரங்களை உடையவர். நான்கு நாய்கள் அவருடன் இருக்கும். அவை நான்கு வேதங்களை உணர்த்துபவை. மகாராஷ்டிரத்தில் தத்தாத்ரேயர் வழிபாடு அதிகம். சீரடி சாயிபாபா அவர் அவதாரமே என்பர். குரு பூர்ணிமா நாளில் இத்தகைய ஞானகுருக்களை வணங்கி மேன்மை பெறுவோம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar