திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அருகே 400 ஆண்டு பழமையான தேரடி முனீஸ்வரர் கோயில் உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவின் போதுதேர் கிளம்பும் முன் இவருக்கு பூஜை செய்வதால் ’முதல்பூஜை முனீஸ்வரர் கோயில்’ எனப்படுகிறது. புங்க மரத்தின் கீழ் தியானம் செய்தபடி ஊரைக் காவல்புரிகிறார் இவர். சுவாமிக்கு முன்பாக நிற்கும் முனி மரம் என்னும் புங்க மரத்திற்கும் பூஜை நடக்கிறது. நினைத்தது நிறைவேற சுவாமிக்கு வேட்டி சாத்தியும், பாலபிஷேகம் செய்தும் வழிபடுகின்றனர். இங்கு திருநீறு பூசித் தீர்த்தம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்கின்றனர் பக்தர்கள்.