அதர்மம் ’இப்படித்தான் வரும்’ என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை என்றால், தர்மமும் இப்படித்தான் வரும் என்பதற்கும் வழி இல்லை. அதர்மம், இரண்யனாகவும், மகாபலியாகவும், ராவணனாகவும் வரும் போது, தர்மம் நரசிம்மனாகவும், வாமனனாகவும், ராமனாகவும் வரும். அதே அதர்மம் துரியோதனனாகவும், சகுனியாகவும் பிறந்து சூதாடி நாட்டை அபகரித்தால், திரவுபதியை துயில் உரித்தால் என்ன நடக்கும்? தர்மம் கிருஷ்ணராக பிறந்து குருஷேத்திர போரை நிகழ்த்தி அதர்மத்தை அழிக்கும். தர்மத்தின் வழியில் வாழ்ந்தால், தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே கிருஷ்ணாவதாரத்தின் நோக்கம்.