வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்கு ’ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்’ பயன்படுத்தினால் அது நம் கட்டளைகளை ஏற்று செயல்படும். அது போல நம்மைச் சுற்றி நிகழ்வதில் எல்லாம் மனம் ஈடுபட்டால், முறை தவறி செயல்படும். கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதே ஒரே வழி. தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவரை வழிபட்டால் எதிர்மறை எண்ணம் மறையும்.