தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி