நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவதற்கான காரணம் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மது, கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிக்க விரும்பிய தேவர்கள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்தனர். சீதையை மீட்கச் சென்ற ராமரும் நாரதரின் உபதேசத்தால் அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டு ராவணனைத் தோற்கடித்தார். இதனையே நவராத்திரி என்னும் பெயரில் கொண்டாடுகிறோம்.