சரஸ்வதியை அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாக வேதம் போற்றுகிறது. வெண்ணிறம் கொண்ட அன்னம் போல படித்தவர்களும் மாசின்றி வெள்ளை மனதுடன் இருக்க வேண்டும். அவளது வெள்ளைப்புடவையும், ஆசனமான வெண்தாமரையும் இதையே வலியுறுத்துகின்றன.
தென்னகத்தில் சரஸ்வதி மயில் வாகனம் கொண்டவளாக திகழ்கிறாள். ரவிவர்மாவின் ஓவியங்களில் மயில் வாகனமே இடம் பெற்றிருக்கும். தோகையை விரிப்பதும், மடக்குவதுமாக இருக்கும் மயில் போல கல்வியாளர்கள் பரந்த அறிவுடன் இருப்பதோடு பண்பில் அடக்கம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.