’ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜயராம்’ எனும் இந்த மந்திரத்தை ’தேரா அக்ஷர்’ என்பர். ’தேரகஹ்’ என்றால் 13. ’அக்ஷர்’ என்றால் எழுத்து. இந்த மந்திரத்தை நாள்தோறும் ஜபித்தோருக்கு மனதில் புத்துணர்ச்சியும், உத்வேகமும் உண்டாகும். சமர்த்தராமதாசர் என்னும் மகான் அனுமனின் மறு அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த மந்திரத்தையே ஜபித்து பலவித அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய கட்டளைப்படியே மாவீரர் சிவாஜி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி மக்களுக்கு நல்வழி காட்டினார்.