Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சம்மணம் என்றால் என்ன தெரியுமா? கோவிலில் வாசல் படியை தொட்டுக் கும்பிட்டு செல்வது ஏன்? கோவிலில் வாசல் படியை தொட்டுக் ...
முதல் பக்கம் » துளிகள்
மூக்குத்தி அணிவதின் மகத்துவம் என்ன?
எழுத்தின் அளவு:
மூக்குத்தி அணிவதின் மகத்துவம் என்ன?

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
04:01

பெண்கள் ஆரோக்யமாக வாழ்ந்திட மூக்கு காதுகளில் துளையிட வேண்டுமென்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. துளையிட்ட இடத்தில் தங்கம், நவரத்னங்களை வைப்பதால், மாதந்தோறும் மற்றும் மகப்பேறு காலத்திலும் இழந்த சக்தியை ஈடுசெய்யும் என்று வைத்திய நூல் கூறுகிறது. ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணிவது மிக அவசியமாகிறது.

பாற்கடலைக் கடைந்தபோது அதில் கிடைத்த பொருள்களுடன் மஹாலட்சுமியும் அவளுக்கு முன் ஜேஷ்டா தேவியும் (மூதேவி) தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. முன்தோன்றியதால் ஜேஷ்டாதேவியை அக்கா” என்றும் லக்ஷ்மியை தங்கை” என்றும் கூறுவர். மூதேவி சென்ற இடம் சீரழிந்தும் லக்ஷ்மி சென்ற இடம் சீரும் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்த மூதேவி, இறைவனிடம் என்னை யாரும் விரும்புவதில்லை. என்னை மதிக்கக் கூடிய இடத்தில் இருக்க அருள வேண்டும்” எனக் கேட்டாள். வேண்ட முழுதும் தருபவனான இறைவன், எந்த இடத்தில் இருக்க விரும்புகிறாய்?” என்று கேட்டபோது, மிக முக்யமாக எல்லாராலும் மதிக்கப்படக்கூடிய பசுவின் முகத்திலேயும், பெண்களின் மூக்கிலேயும், ஆண்களின் பிருஷ்டபாகத்திலேயும் (இடுப்பு) இருக்க வேண்டினாள்.

அப்படியே வரந்தந்துள்ளதை அறிந்த, அந்த மூவரும் இறைவனிடம் வணக்கத்திற்கு உரியவர்களாக விளங்கி வரும் எங்களிடம் மூதேவி இருந்தால் யார் எங்களை மதித்து வணங்குவார்கள்?” என்று கேட்டதற்கு, இறைவன் மூதேவி உங்களிடம் வராமல் இருப்பதறகு வழி சொல்கிறேன். ஆண்கள் ஆஸனமில்லாமல் செய்யும் எந்தக் காரியமும் மூதேவிக்கு உரியதாக ஆகும். ஆஸனத்தில் அமர்ந்து செய்யும் போது மூதேவி அங்கு வரமாட்டாள். பசுவிற்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பின்புறம் லக்ஷ்மி வாசம் செய்வதால் பின்புறம் பூஜை வழிபாடு செய்து, எந்த மிருகத்திற்கு இல்லாத அளவு உன்னுடைய சரீரமே எல்லா தெய்வங்களும் உறைகின்ற இடமாகவும், உன் சரீரத்தில் உண்டாகும் பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோஜலம் யாவும் இறைவழிபாட்டிற்கும் மனிதனுடைய ஆரோக்யத்திற்கும் உபயோகப்படும். பெண்களுக்கு மூக்கில் மூதேவி வாசம் இல்லாமல் இருப்பதற்கு லக்ஷ்மியின் அம்சமான நவரத்னங்களும் தங்கத்தாலான மூக்குத்தியும் அணிவதால் மூதேவி வரமாட்டாள். லக்ஷ்மி நித்யவாசம் செய்து வருவதுடன் சுமங்கலி பூஜை செய்து வழிபடுவார்கள் என்று ஆசி வழங்கினார். ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டியது அவசியமாகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar