Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராதா கிருஷ்ணர்
  ஊர்: திருப்பாலை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,  
     
 தல சிறப்பு:
     
  மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஒரு வைணவத்தலத்தில் துர்காவும், மதுரையின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் காட்சி தருவது மற்றொரு சிறப்பான அம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராத கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை- 625 014  
   
போன்:
   
  +91 452 2681079, 95850 46910 
    
 பொது தகவல்:
     
  ராஜகோபுரத்தை அடுத்து மகாமண்டபமும், அதில் கருவறையும் அமைந்துள்ளன. கோயிலை சுற்றி வரும் போது சக்கரத்தாழ்வார், நரசிம்மர், துர்கா, அனுமான், கருப்பண்ண சுவாமி சன்னதிகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் ஒரே இடத்தில் கிட்டுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஒரு வைணவத்தலத்தில் துர்காவும், மதுரையின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் காட்சி தருவது இன்னும் சிறப்பான அம்சம். கண்ணனுக்கு பாமா ருக்மணி என பல மனைவியர் இருந்தாலும் அவனையே உயிராகக் கொண்டு வாழ்ந்த ராதையை "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற அடிப்படையில் பிற தேவியரின் சிலைகள் எதுவும் இல்லாமல் இங்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராதைக்கு தமிழகத்தில் வேறு எங்கும் தனிக்கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் உண்டு. மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.
 
     
  தல வரலாறு:
     
  ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதையை கேளுங்கள். ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றியசெய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. ""கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாக காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே! பசி தாங்க மாட்டானே! இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையே,'' என் வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லை.''  எனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.

""ராதா" கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா? பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா.

அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள்.

பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள் யசோதை "கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே? என பரபரப்பாகக் கேட்டாள்.

ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. ""அம்மா! கண்னை மூடிக் கொண்டு நம் கோபாலனின் உருவத்தை தியானியுங்கள். நீங்கள் அவனைக் காண்பீர்கள்,'' என்றாள்.

யசோதா கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்தாள். உடனே தூய பக்தியும், தூய தெய்வீகப் பரவச நிலையுமே வடிவெடுத்தவளாகிய ராதை, தனது தெய்வீக சக்தியை யசோதையிடம் செலுத்தினாள். அதன் காரணமாக, மறுகணமே யசோதையால் கோபாலனைக் காண முடிந்தது.

பிறகு யசோதை ராதையிடம், ""அம்மா! நான் கண்களை மூடிக் கொள்ளும் போதெல்லாம், என் அன்பிற்குரிய கோபாலனை நான் பார்க்கும்படியாக செய்ய வேண்டும்,'' என பிரார்த்தித்துக் கொண்டாள்.

இந்த கதையின் மூலம் கண்ணனே நினைவாக இருந்தால், அவன் எப்போதுமே நம்முடன் இருப்பது போல தோன்றும் என்று தெரிய வருகிறது.

இப்படி கண்ணனையே உயிராக, உடலாகக் கொண்ட ராதைக்கு மதுரையில் ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. துவாரகை கிருஷ்ணன் கோயில் கோபுரத்தைப் போல வடஇந்தியக் கலையின்படி அழகிய கோபுரம் கோயில் வாசலை அலங்கரிக்கிறது. கிருஷ்ணரும், ராதையும் பசுவின் முன்னால் நிற்பது போன்ற கருவறை பார்க்க கண்கோடி வேண்டும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.