முருகப்பெருமான் சன்னதி, ராகு,கேதுவுடன் விநாயகர் சன்னதி, துர்க்கை சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, மனைவியுடன் தனம் தரும் பைரவர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
திருமணத் தடை நீங்கவும், நினைத்த காரியம் நடக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
பெண்கள் விளக்கேற்றி வழிபடுகிறார்கள், சனிக்கிழமைகளில் தோலுடன் கூடிய உளுந்தம் பருப்பை வேகவைத்து, படைத்தால் திருமண தடை நீங்குவதுடன், சிறந்த மணவாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்கள் நம்பிக்கை.
தலபெருமை:
முருகப்பெருமான் வேலுக்கு தினம் அபிஷேகமும், சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள், பவுர்ணமியன்று அன்னதானமும் நடக்கிறது. விநாயகர் சன்னதியில் தேய்பிறை சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, தட்ஷிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் பூஜைகளும், குருபெயர்ச்சியன்று யாகமும் நடக்கிறது. பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை களில் ராகுகால பூஜை நடக்கிறது என்றனர்.
தல வரலாறு:
ஹார்விபட்டி 1940ல் உருவாக்கப்பட்டது. இந்நகரை உருவாக்கிய எஸ்.ஆர்.வரதராஜலு நாயுடு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகத்தன்று, இங்கு இருந்து மக்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். 1940ல் துவங்கிய பால்குடம் நிகழ்ச்சி இன்றுவரை தொடர்கிறது.. தற்போது கோயில் உள்ள இடத்தில், 2002ல் ஸ்ரீபாலமுருகன் கோயில் உருவாக்கப்பட்டது. 2013 மார்ச் மாதம் தனம்தரும் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:திருப்பரங்குன்றத்தை போலவே முருகனின் வேலுக்கு தினமும் அபிஷேகம் செய்வது சிறப்பு.