Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தேவி கருமாரியம்மன்
  தல விருட்சம்: அரசமரம், வேம்பு
  ஊர்: மதுரை எல்லீஸ் நகர்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆவணி வளர்பிறை முதல் வெள்ளியில் காப்பு கட்டி அடுத்த வெள்ளியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அபிஷேக ஆராதனை, சமபந்தி போஜனம், சக்தி கிரகம் எடுத்தல் போன்றவைகள் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அன்று இரவு அப்பகுதி முழுவதும் சாமி சுற்றி வரும். அப்போது ஒவ்வொரு வீடுமே மண்டகப்படி தான். அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு செய்வதும் தனி சிறப்பு தான். இத்தலத்தில் சங்கடகர சதுர்த்தியில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளி தோறும் நடத்தப்படும் ராகு கால பூஜை, மாத கடைசி வெள்ளி சிறப்பு அர்ச்சனை, செவ்வாய் தோறும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை ஆகியவையும் ஆவணித்திருவிழாவும் உபயதாரர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் எல்லீஸ்நகர், மதுரை- 625 016.  
   
போன்:
   
  +91 99409 46092, 97897 91349 
    
 பொது தகவல்:
     
  இந்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோயிலுக்கு சென்றால் விநாயகர், முருகன், சிவன், நாகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், அஷ்டலட்சுமிகள், நவகிரகம் ஆகியவற்றை ஒரே தலத்தில் தரிசனம் செய்யலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  செவ்வாய் தோறும் இங்குள்ள முருகனுக்கு காலை பத்து மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை மிகவும் பிரசித்தமானது.

மாங்கல்யம்தான் இக்கோயிலின் அதிக காணிக்கையாக வருகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  இங்கு கோயிலுக்கு முன்னும், பின்னும் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்து வருகின்றன. இதில் கோயிலின் முன் அம்மனின் பார்வையில் உள்ளதில் வேப்பமரம் பெரியதாகவும் அரசமரம் சிறியதாகவும் வளர்ந்துள்ளது. அதே போல் கோயிலின் பின் உள்ளதில் அரசு பெரியதாகவும் வேம்பு சிறியதாகவும் வளர்ந்துள்ளது.

கிழக்கு பார்த்த இச்சன்னதியில் ஐம்பொன்னில் அமைந்திருக்கும் உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் வெவ்வேறு அலங்காரம் சிறப்பாக செய்யப்படுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மங்கையர் மனம் கலங்கினால் இந்த மகமாயிக்கு மனம் தாங்காது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே நமது தேவையறிந்து கொடுத்து காத்திடுவாள் தேவி கருமாரி.
 
     
  தல வரலாறு:
     
  பல ஆண்டுகளுக்கு முன் காடாக இருந்த இப்பகுதியில் தானாக கிடைத்த சூலாயுதத்தை வைத்து மக்கள் சில காலம் வழிபட்டு வந்தனர். பின் சுயம்புவாக கிடைத்த மார்பளவு கருமாரி சிலை வைத்து அதை மூலவராக வழிபாடு செய்து வருகிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar