Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துநாயகியம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம்
  ஊர்: பரவை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், புரட்டாசி நவராத்திரி திருவிழா நிறைவுபெற்ற மறுநாள், இக்கோயிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கும். பத்து நாட்கள் திருவிழா நடக்கும். விழா நாட்களில் அம்மன் பவனி உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள முத்துநாயகியம்மன் எட்டு கரங்களுடன் சூலாயுதம் ஏந்தி, இடது காலில் அசுரனை மிதித்தபடி சுயம்புவாக காட்சி அளிக்கின்றாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை, மதுரை.  
   
போன்:
   
  +91 99949 12047 
    
 பொது தகவல்:
     
 

இங்குள்ள அம்மன் மூலஸ்தானத்தின் மேல் ஏகதள விமானம் அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் உள்ளேயே உற்சவ அம்மனும் அமைந்துள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
 

குடும்பக் கஷ்டம் நீங்க, தொழிலில் லாபம் கிடைக்க, தீவினைகளால் ஏற்படும் கஷ்டங்கள், நோய்கள் அகல இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட நாள் விரதமிருந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பக் கஷ்டம் நீங்க, தொழிலில் லாபம் கிடைக்க, தீவினைகளால் ஏற்படும் கஷ்டங்கள், நோய்கள் அகல, அம்மனுக்கு மல்லிகைப் பூ சாத்துகின்றனர்.  
    
 தலபெருமை:
     
  அம்பாள், எட்டு கரங்களுடன் சூலாயுதம் ஏந்தி, இடது காலில் அசுரனை மிதித்தபடி சுயம்புவாக தோன்றினாள். காலப்போக்கில், அம்மனுக்கு ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில், பெரிய கோயில் கட்டப்பட்டது. மூலவர் முத்துநாயகி அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலின் பின்புறம் நான்கு ஏக்கர் நில பரப்பில் புனித தீர்த்தமான தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இந்த தெப்பத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

வரம் தரும் நாயகி: திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட நாள் விரதமிருந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பக் கஷ்டம் நீங்க, தொழிலில் லாபம் கிடைக்க, தீவினைகளால் ஏற்படும் கஷ்டங்கள், நோய்கள் அகல, அம்மனுக்கு மல்லிகைப் பூ சாத்துகின்றனர். உற்சவ காலங்களில் அக்னிச்சட்டி, பால்குடம், பொங்கல் படைத்தல், மாவிளக்கு ஏற்றுதல் ஆகிய நேர்ச்கைள் நடக்கும். இப்பகுதியை சேர்ந்த பலருக்கு முத்து என்ற பெயர் இருக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
 

பல ஆண்டுகளுக்கு முன் பரவை பகுதி முழுவதும் புஞ்சை நிலங்களாக இருந்தது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர். ஒரு சமயம் விவசாயிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் உழுது கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் ஏர் ஆணி தட்டியது. தொடர்ந்து முயற்சிக்க ஏதோ ஒரு உலோக சத்தம் கேட்டது. விவசாயிகள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். பூமியில் பதிந்த ஏரை தூக்கினர்., பூமிக்குள் முத்துமுத்தாக சிகப்பு நிறத்தில் ஏதோ கொப்பளித்தது. இந்த அற்புதத்தை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியாகி, மற்ற விவசாயிகளை அழைத்தார். அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அபூர்வத்தை பார்த்து வியந்தனர். அனைவரும் இந்த இடத்தில் அதிசய சக்தி இருப்பதாக கருதினர். மேலும், அவ்விடத்தில் தோண்டிப் பார்த்த போது, உள்ளிருந்து ஒரு சிலை வெளிப் பட்டது. ஆதிபராசக்தியின் திருவுருவமான அழகான அம்மன் சிலையைக் கண்டு மக்கள் பக்தி பரவசம் கொண்டனர். பக்திப்பெருக்குடன் தீபாராதனை செய்து வழிபட்டனர். இவளுக்கு முத்து நாயகியம்மன் என்று பெயர் சூட்டப் பட்டது . அங்கு வசித்த பட்டையக்காரர் என்பவர் கனவில் அம்மன் தோன்றி நீங்கள் வசிக்க ஒரு குடில் இருப்பது போல், எனக்கும் ஒரு குடில் வேண்டாமா?, என கேட்டாள். இந்த விசயத்தை கிராம கூட்டத்தில் அவர் கூற பொதுமக்கள் கோயில் கட்டினர். 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள முத்துநாயகியம்மன் எட்டு கரங்களுடன் சூலாயுதம் ஏந்தி, இடது காலில் அசுரனை மிதித்தபடி சுயம்புவாக காட்சி அளிக்கின்றாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.