Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மீன்குளத்தி பகவதி அம்மன்
  ஊர்: பள்ளசேனா
  மாவட்டம்: பாலக்காடு
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  கேதாரி கவுரி விரதம், நவராத்திரி, ஆடிவெள்ளி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா, ஒட்டன் துள்ளல், கதகளி என்று பல விழாக்கள் இருப்பினும் 8 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில் பள்ளசேனா - 678 505, பாலக்காடு மாவட்டம் கேரள மாநிலம்.  
   
போன்:
   
  +91 4923 - 268495 
    
 பொது தகவல்:
     
  இங்கு சப்த மாதர்கள், கணபதி, வீரபத்ரர், துர்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண பாக்கியம், சந்தான பாக்கியம், நோய் நிவாரணம், காரிய ஸித்தி மற்றும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்க அருள்பாலிப்பாள் மீன்குளத்தி பகவதி அம்மன், தீராத நோயால் அவதிப்படுவோர், இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினால், விரைவில் குணம் அடைவார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அழகிய மீனின் கண்களை உடையவள் மதுரை அங்கயற்கண்ணி மீனாட்சி. கேரள மண்ணில், மீன்குளத்தி பகவதி எனும் திருநாமத்துடன் அழகு மிளிரக் காட்சிதருகிறாள். கேரள பாணியில் அமைந்த அற்புதக் கோயில். வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் கொடிமரம் தேக்கு; இதனை செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர். சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பல்லசேனா எனும் இந்த இடம் இன்று பல கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்கிறது. மலைகளாலும், வயல்களாலும் கழிந்த பல்லசேனையில் கோயில்களும், குளங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரிய கோயிலையும், பெரிய குளத்தையும் கொண்டு மீன்குளத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் தொடர்பு உண்டாகக்கூடிய ஒரு கோயிலாக விளங்குகிறது. முக்கிய பிரார்த்தனைகளாக நிறப்பற, சாந்தாட்டம், மூன்று கால பூஜை, தங்கத்தாலி, சோறூட்டல், சுயம்வர புஷ்பாஞ்சலி, ஐக்கிய சூத்திரம்,  இரத்த புஷ்பாஞ்சலி, பாக்ய சூத்திரம், சரஸ்வதி மந்திர புஷ்பாஞ்சலி, வெடிபூஜை, ஆள்ரூபம் வைத்தல், சந்தனம் சார்த்தல் நடைபெறுகிறது.  
     
  தல வரலாறு:
     
 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் அழிந்து அதனால் கொடிய பஞ்சம் விளையவே மக்கள் உயிர்வாழ பல இடங்களை நாடி புறப்பட்டனர். சிதம்பரத்திலுள்ள வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பை சேர்ந்த மூன்று தாய்வழி குடும்பத்தினரும் புறப்பட்டனர். மூன்று குடும்பத்தினரும் சேர்ந்தே வழிநடந்தனர். வழிநடைக்கான சில பொருட்களை கொண்ட மூடை ஒன்றை ஏந்திய அவர்கள் பனை ஓலைக்குடைகளையும் பிடித்து நடந்தனர். வழியில் தங்கள் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை மதுரைக்கு சென்று தரிசித்தனர். ஒரு பக்தன் ஒரு கல்லை எடுத்து அம்மனாக மனதில் உருவகம் கொண்டு தன்னுடைய மூடையில் வைத்துக் கொண்டான். நடந்தே சென்று அவர்கள் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லவசேனா என்ற கிராமத்தை அடைந்தனர். சிதம்பரத்தில் வைர வியாபாரிகளாக சிறப்புற்றிருந்த அக்குடும்பத்தினர் பல்லசேனையில் வாணிபம் செய்து நல்ல முன்னேற்றம் அடையும் மனம்கொண்டனர். செயலில் ஈடுபட்டு ஏராளமான சொத்துக்களையும் சம்பாதித்தனர். அவர்களில் ஒருவர் வாணிபத்திற்காக எங்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் தங்கள் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை மதுரைக்கு சென்று வணங்கிய பின்னரே செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை மதுரைக்கு செல்ல முற்பட்ட அவள் குளத்தில் குளிக்க இறங்குவதற்கு முன் பொருள் நிறைந்த மூடையையும், பனைஓலை குடையையும் சிறிது நேரம் பாதுகாத்தும்படி அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த இரண்டு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார். தமக்கு முதுறை வந்துள்ள அப்பெரியவருக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. வயதாகி விட்டதால் நெடுந்தூரம் நடந்து சென்று மதுரை மீனாட்சி அம்மனை காணமுடியாத நிலை ஏற்படுமோ என வேதனையுற்றார்.

பக்தியோடு அம்மனை நினைத்து தன் இயலாமையை கருதி கலங்கியபடி குளித்து முடித்தார். சிரமத்துடன் மீண்டும் பயணத்தை தொடர நினைத்து குடையையும் மூடையையும் எடுக்க முற்பட்டார். குடையை எடுக்க முடியவில்லை. பெரியவர் அஞ்சி நடுங்கினார். இதுபற்றி காரணமறிய ஜோதிடரை அணுகினார். மதுரை மீனாட்சி அம்மனே அங்கு குடிவந்துள்ளதாக ஜோதிடர் வாயிலாக அறிந்தார். இந்த தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியது. குடையில் அம்மன் குடியிருந்த காரணத்தால் அந்த இடத்திற்கு அன்றுமுதல் குடமந்து என்று சிறப்பு பெயர் சூட்டப்பட்டது. குடமந்து தோன்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் மீன்குளத்தி அம்மன் கோயிலும், நான்கு ஏக்கர் நிலத்தில் குளமும் உருவாக்கப்பட்டது. பக்தரான அந்த வியாபாரியின் நினைவாக ஒரு திருமந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.