Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாமாரியம்மன்
  ஊர்: ஒளிமதி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பவுர்ணமி, சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  சந்திர பலம் தரும் அற்புதமான தலம். சந்திர ஆதிக்கம் நிறைந்த தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் ஒளிமதி, தஞ்சாவூர்.  
   
    
 பொது தகவல்:
     
  ஒளிமதி கிராமத்தின் சனி மூலையில் வஜ்ரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. ஈசான்ய மூலையில், கிழக்குப் பார்த்தப்படி கோயில்கொண்டிருக்கிறாள் மகா மாரியம்மன்.  
     
 
பிரார்த்தனை
    
  அம்மை நோய் நீங்க இங்குள்ள அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். தீர்த்தம் பிரசாதம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பொங்கல் படையல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

இங்கே 27 நட்சத்திரப் பெண்களின் தவத்தை ஏற்றுக்கொண்டு, சந்திரனின் சாபம் போக்கிய ஈசன், வஜ்ரபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. சந்திர பகவானின் சாபம் நீங்கவேண்டுமென 27 நட்சத்திரப் பெண்கள் தவமிருந்தபோது வெப்பத்தால் இந்த ஊர் தகித்து போனது. அப்பொழுது ஊர்மக்கள் அம்மை நோயால் அல்லாடினார்கள். இதையெல்லாம் அறிந்த பராசக்தி இங்கே இத்தலத்திற்கு வந்து, சந்திரனின் சாபத்திற்கு விமோசனம் அளிக்க வேண்டும் என சிவனாரைக் கேட்டுக்கொண்டாள். அதேநேரம் அம்மனின் பேரளுளால் அம்மை நோய் குணமாகி ஊர்மக்கள் ஆரோக்கியமா வாழ்ந்தார்கள். அதனால் இவ்வூரில் கருங்கல் பணி செய்யப்பட்ட கோயில் அம்மனுக்கு தனியாக அமைந்துள்ளது.

சந்திர மனோகரன் இழந்த ஒளியையும் தேஜஸையும் அவர் திரும்பப் பெற்ற தலம் என்பதாலும், அதற்கு அருளிய அம்மன் இங்கே குடிகொண்டிருப்பதாலும் இந்தத் தலம் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த தலம்.

 
     
  தல வரலாறு:
     
 

சந்திரனின் பொலிவையும் தேஜஸையும் கண்டு, தன் 27 நட்சத்திரப் பெண்களையும் அவருக்கு மணம் முடித்து வைத்தார், தட்சன், பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்கள் மனம் கொள்ளாத சந்தோஷத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதானே எந்தவொரு தகப்பனின் எதிர்பார்ப்பும்! அந்த எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் இருந்த தட்சன், உண்மை தெரிந்து கலங்கிப் போனார். 27 பெண்களில் ஒருத்தியைத் தவிர மற்ற 26 பேரும் வாடிப்போன முகத்துடன் சோகமாக இருந்ததை அறிந்து பதைபதைத்துப் போனார். என்னாச்சு என் செல்வங்களே... ஏனிந்தச் சோகம்? என்று தந்தையார் கேட்டதும், அதுவரை அடக்கி வைத்திருந்த சோகத்தையெல்லாம் அழுகையாக வெடித்து, கொட்டத் துவங்கினார்கள், மகள்கள். 27 மனைவிமார்கள் மீதும் அன்பும் பாசமும் வைத்திருந்தாலும். ரோகிணி மீது மட்டும் அலாதி பாசமும் கொள்ளைப் பிரியமும் கொண்டிருந்தாராம் சந்திர பகவான். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். எந்நேரமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார். நம்மைவிட ரோகிணி மீது அதிக பாசம் கொண்டிருக்கிறாரே, கணவர் என்று மற்ற மனைவியர் வருந்தினார்கள். தந்தையார் வந்து கேட்டதும், தங்களை சந்திர பகவான் கண்கொள்ளாமல் இருக்கும் விவரத்தைச் சொல்லிப் பொலபொலவெனக் கண்ணீர் உகுத்தார்கள்.

அதைக் கேட்டு எந்தத் தகப்பன்தான் சும்மா இருப்பான்? ஆவேசமான தட்சன், என் மகள்களை நோகடித்துவிட்டு, நீ மட்டும் சுகவாசியாக இருக்கிறாயா? அவர்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் போது, நீ மட்டும் நிம்மதியும் சந்தோஷமுமாக உலா வருகிறாயா? நீ பெரிய அழகன் என்கிற கர்வம்தானே உனக்கு? இதோ, உன் கர்வத்தை அடக்குகிறேன் பார்! உன் மொத்தக் குதூகலத்தையும் அழித்தொழிக்கிறேன். உன்னில் இருந்து வெளிக் கிளம்புகிற ஒளிதானே உனக்கு அழகு! அந்த அழகு மொத்தமும் இன்றோடு அழியட்டும். உன்னில் இருக்கிற வெளிச்சம் அனைத்தும் மங்கி, இருள் கவியட்டும் எனச் சாபமிட்டார் தட்சன். இதனால் ஒளியை இழந்து, களையைத் தொலைத்து, இருள் கவிந்து நின்றார் சந்திர பகவான். ஆனால் அவரைவிட அதிகம் கலங்கித் தவித்தது அவரின் மனைவிமார்கள்தான்! ஏதோ நம் அப்பா, கணவருக்கு நாலு வார்த்தை அறிவுரை சொல்லி மனத்தை மாற்றுவார் என்று பார்த்தால், இப்படிச் சாபம் கொடுத்து, அவரது அழகைக் குலைத்துவிட்டாரே! என்று கதறினார்கள். என்ன இருந்தாலும், ரோகிணி நம் சகோதரிதானே! அவளிடம் கணவர் கொஞ்சம் கூடுதல் பிரியம் காண்பித்தால், அது ஒரு பெரிய குற்றமா? என்று கணவரின் பக்கமாகச் சாய்ந்தார்கள்.

பிறகு, 27 சகோதரிகளும் ஒன்று சேர்ந்து, சந்திர பகவான் தனது பழைய பொலிவைப் பெறவேண்டும் எனச் சிவனாரை நோக்கித் தவமிருந்தனர். அதில் மகிழ்ந்த சிவனார், சந்திரனுக்குக் காட்சி தந்து, ஒளி பொருந்திய உன் பேரழகு, மீண்டும் உலகமெங்கும் பரவி, வெளிச்சம் தரட்டும். ஆனால் மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. பிறப்பது இருப்பதுதான் வாழ்க்கை; பிறப்பது எல்லாம் அழிவதற்கே. அழிவது மீண்டும் பிறப்பதற்கே என்பதை மானிடர்க்கு உணர்த்துகிற விதமாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிர்வாய். பிறகு, மீண்டும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவாய் என அருளினார். சந்திரனுக்காக 27 நட்சத்திரப் பெண்கள் தவமிருந்ததும், அவரின் சாபம் போக்கி சிவனார் அருளியதுமான திருத்தலம்  ஒளிமதி.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சந்திர பலம் தரும் அற்புதமான தலம். சந்திர ஆதிக்கம் நிறைந்த தலம்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.