Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
  அம்மன்/தாயார்: சவுந்தரநாயகி, அழகம்மை
  தல விருட்சம்: சரக்கொன்றை
  தீர்த்தம்: காவிரிதீர்த்தம், கோயில் தீர்த்தம்
  புராண பெயர்: திருப்பெரும்புலியூர்
  ஊர்: திருப்பெரும்புலியூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  சம்பந்தர்

தேவாரப்பதிகம்

தோடுடையார் குழைக்காதில் சுடுபொடி யாரனலாடக் காடுடையார் எரிவீசும் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடையார் பொருளின்பம் நல்லவை நாளும் நயந்த பீடுடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 53வது தலம்.
 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 53 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 10 மணி முதல் இரவு 11 மணி மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 94434 47826,+91- 94427 29856 
    
 பொது தகவல்:
     
  3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில்.

பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராஹி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.



 
     
  தல வரலாறு:
     
  புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது.

நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar