Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாண்டுரங்கன்
  ஊர்: கோவிந்தபுரம்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில் கோவிந்தபுரம், கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 435- 247 2300 
    
 பொது தகவல்:
     
 

பிரவேச துவார், மகாதுவார், வசந்த மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகிய பிரிவுகள் கோயிலில் உள்ளன. மண்டபங்கள் அனைத்தும் தூண்கள் எதுவும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமானது. ஆடியோ, வீடியோ, ஏசி, முதியவர் களுக்காக லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரம் சதுர அடி பரப்பிலான வசந்த மண்டபத்தின் மேல்தளம், பைபரால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தின் முனைப்பகுதியில் மின் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள மகா மண்டபத்தின் மேல் பகுதியில் பாண்டுரங்க பக்தர்களின் சிலைகள் உள்ளன. அருகில் பள்ளியறை உள்ளது. 600 சதுர அடி பரப்புள்ள அர்த்தமண்டபத்தில் ஹரிதாஸ் சுவாமி, கிருஷ்ணப்ரேமி சுவாமி, ஞானானந்த சுவாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. 70 அடி உயரமுள்ள இந்த மண்டபங்களில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம். கோயிலை வலம் வரும் வகையில் சிறப்பு வாசல்களும் அமைக்கப்பட்டுள்ளன.பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ள இவற்றில் பெரும்பான்மையான இடங்கள் பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. தினமும் பசு வழிபாடான கோபூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலப்பகுதியை ஆஸ்ரமத்தின் செயல்பாட்டிற்கு தர மனமாற முன்வந்து ஆஸ்ரமத்தின் பணிகளை விரிவடையச் செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பெருமைமிக்க ஆதீனங்கள் அமைந்து ஆன்மீக பணியாற்றும் நிலையில் மேலும் பக்கபலமாக இக்கோயில் இப்பகுதியில் அமைந்திருப்பது பக்தர்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும் ஏழை மாணவர்கள் ஆயிரம் பேருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  கேட்டவர்க்கு கேட்ட வரம் அள்ளித்தரும் பாண்டுரங்கனிடம் எந்த வரம் கேட்டாலும் தருவார். 
    
நேர்த்திக்கடன்:
    
  உலகாளும் பகவானுக்கு நாம் எதுவும் கொடுக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் கோயில் நிர்வாகத்திடம் கேட்டு நமது நேர்த்திக்கடனை செலுத்தலாம். 
    
 தலபெருமை:
     
  பாண்டுரங்கனுக்கென தமிழகத்தில் சில கோயில்கள் இருந்தாலும், பண்டரிபுரம் போன்ற பிரம்மாண்ட தோற்றத்துடன் கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பலகோடி ரூபாய் செலவிலும், பகவான் நாமத்தின் மகிமையாலும்  கோவிந்தபுரத்தில் உருவான பாண்டுரங்கன் கோயிலில் 2011 ஜூலை 15ம் தேதி குருபூர்ணிமா அன்று பரனூர் மகாத்மா ஸ்ரீகிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  பகவான் நாமத்தின் பெருமையை நிலை நாட்டிய ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

கர்ப்பகிரகம்:
729 சதுர அடி பரப்புள்ள கர்ப்பகிரகத்தில் உள்ள மேடையில், ருக்மணி சமேத பாண்டுரங்கன் காட்சி தருகிறார். பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.

132 அடி உயரம்: இக்கோயில் சூரிய நமஸ்காரத்தில் உள்ள 132 பஞ்ஜாதியை (பிரிவு) வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 40 அடி உயரத்திற்கு தளமும், அதன் மீது 92 அடி உயரத்திற்கு கோபுரமும் வட மாநில கட்டட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது. 18 என்பது ஜெயத்தை குறிக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் கோயில் விமானத்தின் மீது வைப்பதற்காக 18 அடி உயரத்திற்கு செப்புக்கலசம் செய்யப்பட்டு, பக்தர்கள் அதனை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 27 படிக்கட்டுகள் உள்ளன. கோயில் உள்பகுதியில் தெய்வங்கள், மகான்கள், யானை சிற்பங்கள் செய்யப்பட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் தீர்த்தக்குளம் இருக்கிறது. திருப்பணியை மராட்டிய, தமிழக ஸ்தபதிகள் இணைந்து செய்துள்ளனர். தீர்த்தக்குளத்தை ஒட்டிய அரசமரத்தில் இரண்டு யானைகளின் உருவம் அழகுற அமைந்திருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் அதனை வணங்கும் வகையில் அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

தெய்வமாக வளர்க்கப்படும் பசுக்கள்.......

பசுக்கள் தான் நம்மை காப்பாற்றுகிறது என்ற அடிப்படையில்  பாண்டுரங்க ஆஸ்ரமத்தில் கோமாதாக்களாகிய பசுக்கள் அன்போடும், பரிவோடும் வளர்க்கப்படுவது வேறு எங்கும் யாராலும் செய்ய இயலாத சிறப்புக்குரியது. விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் என்கிற பாண்டுரங்க ஆஸ்ரமத்தில் கோமாதாவாகிய பசுக்கள் வளர்க்கப்படுவது மிக முக்கியமான பணியாகும்.  பகவான் கிருஷ்ணர்  பசுக்களை மேய்த்ததன் அடையாளமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவாரகை, பிருந்தாவன், மதுரா ஆகிய பகுதிகளிலிருந்து அப்பகுதி இன 300 பசுக்கள் கொண்டுவரப்பட்டு இங்குள்ள ஆஸ்ரமத்தில் வளர்க்கப்படுகிறது. பாண்டுரங்கனும் கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுவதால் இங்குள்ள பசுக்களையும் அவ்வாறே கருதி வளர்க்கின்றனர். இங்குள்ள 400 பசுக்கள் கட்டப்பட்டுள்ள கொட்டகை மிகவும் சுகாதாரமாக, நவீன வசதிகளோடு அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பசுக்களுக்கும் தனித்தனி பேன் வசதிகளும், வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் மேல் கூரையின் உள்புறத்தில் அலங்கார கீற்று பந்தல்களும், ஸ்பிரிங்குலர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பசுக்களுக்கும் உணவு, சுகாதாரமான குடிநீர் கிடைத்திடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  பசுக்களை முறையாக பராமரிக்க சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பசுக்களின் உடல் நிலையை தினமும் ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் உணவளிக்கப்படுகிறது. இத்தகைய பசுக்களின் உணவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புல் வகைகள் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் செழிப்பாக வளர்க்கப்படுகிறது. பசுக்களின் பராமரிப்பிற்கு தனித்தனியாக ஆட்கள் நியமித்து பணிகள்  தடைபடாத வகையில் தொடர்ந்து நடந்திர  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தினந்தோறும் பசுக்கள் கொட்டகையிலிருந்து சிறிது நேரம்வெளியே காற்றோட்டமான இடத்தில் மேயவிடப்படுகின்றன. இதனால் பசுக்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்து அதிகமாக பால் சுரக்கின்றன.  இத்தகைய பசுக்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படும் நிலையில் அவைகளிலிருந்து பெறப்படும் பால் உள்ளிட்ட அனைத்தும் பொது மக்களுக்கும், ஆஸ்ரம பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவைகளில் எதுவும் வெளி நபர்களுக்கு விற்கப்படுவதில்லை.

துவாரகை பசுக்களின் உடல் மிகவும் உறுதியாகவும், பெரியதாகவும் உள்ளது. அவைகளின் காதுகள் மிகப் பெரிய அளவில் அமைந்திருக்கிறது. பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டு அதன் காதுகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளதாக முன்னோர்கள் காலத்திலிருந்து கூறப்படுகிறது. அத்தகைய பசுக்கள் கம்பீரமாக கொட்டகையில் நிற்பதை பார்க்கும் போது,  பசு மாடு இப்படி இருக்குமா என்ற ஐயமும், ஆச்சரியமும்  நமக்கு ஏற்படுகிறது. இத்தகைய வகையில் மிகுந்த பராமரிப்போடும், பாசப் பிணைப்போடு வளர்க்கப்படும் கோமாதாக்களை பக்தர்கள் மனம் ஒன்றி வணங்கி செல்கின்றனர். பிரம்மஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ்  தமது உபன்யாச நிகழ்ச்சிகளின் மூலம் வரக்கூடிய வருவாய் அனைத்தையும் பசு வளர்ப்புக்காகவே பயன்படுத்துகிறார். அப்படி பசுக்கள் வளர்க்கப்படுவதால் தான் பிரமாண்டமான பாண்டுரங்கன் கோயில்  பகவான் அருளால் அங்கு அமையப்பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மின்சார வசதி: ஆஸ்ரமத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவை தாங்களாகவே தயாரித்து கொள்ளும் வகையில் பசுக்களின் சாணத்தை கொண்டு தினமும் 12 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென 10 ஆயிரம் சதுர அடியில் சிறப்பு பிளாண்ட் அமைத்துள்ளனர். தினமும் 10 மணி நேர மின் தேவை பூர்த்தியாகிறது.
 
     
  தல வரலாறு:
     
  பண்டரிபுரத்தில் வசித்த ஹரிதாசர் என்னும் பக்தர், ஆரம்பத்தில் பெற்றோர் சொல் கேளாதவராக இருந்தார். பாண்டுரங்கனின் நல்லருளால் மனம்திருந்தினார். பெற்றோருக்கு சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டார். ஒருமுறை, பாண்டுரங்கனே நேரில் வந்து, அவரை வெளியே அழைத்தார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த செங்கல் மீது ஏறி நின்று காத்திரு, என்றார் ஹரிதாசர். பகவானும் காத்து நின்றார். விட்டல் என்றால் செங்கல். அதில் இருந்து பகவானின் திருநாமத்தையும் விட்டல விட்டல என்று சொல்லும் வழக்கம் உருவானது. மகாராஷ்டிராவில் பாண்டுரங்கனுக்கு கோயில் இருப்பது போல, தென்னகத்தில் பிரம்மாண்டமான கோயில் உருவாக்க முடிவெடுக்கப் பட்டது. பிரம்மஸ்ரீ விட்டல் தாஸ்மகராஜ் இந்தக் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தார். பத்து ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் பாண்டுரங்கன் சந்நிதி மட்டும் இங்கிருந்தது. 2003 டிசம்பரில் பெரிய கோயில் கட்டும்பணி துவங்கி நிறைவடைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar