Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம்
  தல விருட்சம்: வில்வம்
  ஊர்: கூரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ராமர் வழிபட்ட தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில், கூரம், காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 44- 27885243, 9787979225 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில்  கருவறை தூங்கானை மாடக் கோயில் வடிவில் கட்டப்பட்டுள்ளது.  தூங்கானை மாட வடிவில் உள்ள கோயில்களில் முதன்மையான கோயில் என கூறலாம். இங்குள்ள சிவலிங்கத்தின் பீடம் சதுரவடிவில் உள்ளது. மண்டபத் தூண்களில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  தமிழகத்தின் கற்கோயில் , கட்டுமானக் கலைக்கும் முன் உதாரணமாக, திகழ்கிறது எனலாம். பரமேச்வரவர்மன், ராஜசிம்மன், நத்திவர்மன், நிருபதுங்கன் என நான்கு பல்லவ அரசர்கள் இவ்வூரின் மீது அதிக அளவில், ஈடுபாடு கொண்டுள்ளனர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் பெருந்திருக்கோயில்  என சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு, ஆதிகேசவப்பெருமாள் கோயில்  உள்ளது. இக்கோயில், பல்லவர்கள் கால கோவிலாகும். வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றிய கூரத்தாழ்வான் அவதரித்தார். கூரத்தாழ்வானுக்கு பெருமாள் கோவிலில் ஒரு தனி சன்னிதி உள்ளது.  
     
  தல வரலாறு:
     
  காஞ்சிபுரத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கூரம் கிராமத்தில், வித்யவினீத பல்லவ பரமேஸ்வர சிவன் கோயில்  உள்ளது. இக்கோயில் , ஏழாம் நூற்றாண்டில், முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவ மன்னர் காலத்தில்  வித்ய வினீத பல்லவரசன் என்னும் குறு நில மன்னன் இந்த ஊரில் நிலத்தை விலைக்கு வாங்கி, கோயிலை கட்டியுள்ளான். இதற்கு வித்ய வினீத பல்லவ பரமேச்வரகிருஹம் என பெயரிடப்பட்டுள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ராமர் வழிபட்ட தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar