Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர்
  தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
  ஊர்: சின்னக் காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  சிவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் முருகன் சந்நிதி அமைந்திருந்தால், அதை சோமாஸ்கந்த அமைப்பு கோயில் என சொல்வதுண்டு. காஞ்சிபுரம் @தனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் எனப் பெயர் பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் விநாயகர் வீற்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு. இந்த அமைப்புள்ள தலத்தை சோமகணபதி கோயில் என்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சின்னக் காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.  
   
    
 பொது தகவல்:
     
  ஆனந்த தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர கணபதி, சுவாமிநாத சுவாமி,  துர்க்கை, ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் இங்குள்ளன. இங்கு ஆதிசங்கரரின் செப்புத்திருமேனி(சிலை) உள்ளது. பிரகாரத்தில் இவரின் திருப்பாதம் உள்ளது. மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். சுவாமியின் பின்புறச் சுவரில் ஆதிசங்கரரும், சோமகணபதியும் உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  முன்வினைப் பாவம் நீங்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள் 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

சோமகணபதி: மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். சுவாமியின் பின்புறச் சுவரில் ஆதிசங்கரரும், சோமகணபதியும் உள்ளனர். இவரை வழிபட்டால் மகப்பேறு விரைவில் வாய்க்கும்.சோமகணபதி சிற்பத்தை உற்றுநோக்கினால் மட்டுமே தரிசிக்க முடியும். இதை தெளிவாகத் தெரியச் செய்ய பக்தர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதனால், ஒரு அரிய ஆன்மிகச்சிற்பம் பாதுகாக்கப்படும். உலக நன்மை கருதி, காஞ்சிப்பெரியவர் பலமுறை இங்கு தவம் செய்திருக்கிறார். கோயிலின் தென்புறத்தில் அவருக்கு சந்நிதி உள்ளது.

பிறசந்நிதிகள்: ஆனந்த தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர கணபதி, சுவாமிநாத சுவாமி,  துர்க்கை, ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் இங்குள்ளன. இங்கு ஆதிசங்கரரின் செப்புத்திருமேனி(சிலை) உள்ளது. பிரகாரத்தில் இவரின் திருப்பாதம் உள்ளது. இதனை வணங்கினால் கண்நோய் நீங்கும். உள்ளதுபிரம்மாவால் உண்டாக்கப்பட்ட பிரம்மதீர்த்த நீரை தலையில் தெளித்து வழிபட்டால் முன்வினைப் பாவம் நீங்குவதோடு, விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். சிவனின் ஆணைப்படி யாகத்தைக் காத்த திருமால் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்றும், கோபம் கொண்டு வந்த சரஸ்வதி வேகவதி என்றும் பெயர் பெற்றாள். சங்கர பக்த ஜன சபையினர் கோயில் நிர்வாகத்தை நடத்துகின்றனர். வேதபாடசாலையும் இங்கு இயங்குகிறது. இத் தலத்தை சோமகணபதி கோயில் என்கின்றனர்.

 
     
  தல வரலாறு:
     
  சிவனின் இடப்பாகத்தில் தோன்றிய திருமால், தன் உந்திக்கமலத்தில் (தொப்புளில் இருந்து தோன்றிய தாமரை) இருந்து பிரம்மாவைப் படைத்தார். பிரம்மா சிவனிடம், தனக்கு உலக உயிர்களைப் படைக்கும் ஆற்றலை வழங்கும்படி வேண்டினார். சிவன் அவரிடம், பூலோகத்தில் உள்ள புண்ணியத்தலமான காஞ்சிபுரம் சென்று, தன்னை நினைத்து தவமிருக்கும்படியும், மனம் ஒன்றி செய்யும் தவம் வெற்றி பெற்றால், அங்கே தோன்றி, படைப்பாற்றலை தருவதாகவும் வரமளித்தார். பிரம்மாவும் அங்கு சென்று சிவ தியானத்தை ஆரம்பித்தார். அத்துடன், சிவனுக்குரிய சோமயாகம் நடத்த விரும்பினார். யாகம் நடத்துபவர்கள் மனைவியுடன் சேர்ந்து செய்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும். ஆனால், யாகம் தொடங்கிய காலத்தில், பிரம்மாவின் மனைவி சரஸ்வதி கருத்து வேறுபாடு காரணமாக பங்கேற்கவில்லை. அதனால், காயத்ரி, சாவித்திரி என்ற தேவியரை தோற்றுவித்து, யாகத்தைத் தொடங்கினார். இதையறிந்த சரஸ்வதி, ஒரு நதியாக உருவெடுத்து யாக குண்டத்தை அழிக்க முற்பட்டாள். அதிலிருந்து தன்னைக் காக்க பிரம்மா, சிவனை வேண்டினார். சிவனின் ஆணைப்படி திருமால் அந்த நதியின் குறுக்கே அணையாகப் படுத்தார். பின் தன் தவறை உணர்ந்த சரஸ்வதி பிரம்மாவைப் பணிந்தாள். பின், பிரம்மா யாகத்தை நிறைவேற்றினார். அவருக்கு காட்சியளித்த சிவன், உலகத்தைப் படைக்கும் வரத்தை பிரம்மனுக்கு அருள்புரிந்தார். அப்போது பிரம்மா சிவனிடம், தான் தவமிருந்த இடத்தை ஆஸ்தான தலமாக ஏற்று அருளும்படி வேண்டினார். சிவனும், அதை ஏற்று லிங்கத்துக்குள் ஐக்கியமானார். சிவனின் ஆஸ்தான தலம் என்பதால் இக்கோயில் சிவாஸ்தானம் எனப்படுகிறது. பிரம்மன் வணங்கிய சிவன் என்பதால், சுவாமிக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் முருகன் சந்நிதி அமைந்திருந்தால், அதை சோமாஸ்கந்த அமைப்பு கோயில் என சொல்வதுண்டு. காஞ்சிபுரம் @தனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் எனப் பெயர் பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் விநாயகர் வீற்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு. இந்த அமைப்புள்ள தலத்தை சோமகணபதி கோயில் என்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar