Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீநிவாசப்பெருமாள்
  அம்மன்/தாயார்: அலர்மேல்வள்ளித் தாயார்
  ஊர்: அப்பன் திருப்பதி
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா  
     
 தல சிறப்பு:
     
  சித்திரைத் திருவிழாவின் போது அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வரும் வழியில் இங்குள்ள மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்குவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு அப்பன் திருப்பதி திருக்கோயில், அப்பன் திருப்பதி, அழகர்கோயில் செல்லும் வழி மதுரை மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  நான்கு மிகப்பெரிய கல் தூண்களின் நடுவே பலிபீடம் அமைந்துள்ளது. அதற்கு முன்பாக இறைவனைத் தொழுதபடி சிரித்த முகத்துடன் கருடாழ்வாரும், இடது புறம் அனுமன் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிருகம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது கோயில். முதல் மண்டப வாசலின் இருபுறமும் உள்ள சண்டான், பிரசண்டான் துவாரபாலகர்களும், வலதுபுறம் சக்கரத்தாழ்வார், விஷ்வக் சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ராமர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கர்ப்பகிருகத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன் தேவியருடன் அழகுற அருள் வழங்குகிறார். அருகிலேயே உற்சவர் விக்ரகங்கள் இருக்கின்றன. இடது புறம் திருமலை நாயக்கர் தன் மனைவியுடன் சிற்பமாகக் காட்சி தருகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் திருமஞ்சனம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அப்பன் திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமாள் என்ற பெயரோடு பெருமாள் திகழ்கிறார். சித்திரைத் திருவிழா நடக்கும்போது, கள்ளழகர் திரும்பி வரும் வழியில் அவருக்கு எதிர்சேவை நடக்கும். அப்போது அவர் இந்த மண்டபத்தில்தான் ஓர் இரவு முழுதும் தங்குவார். அந்த சமயத்தில் மட்டுமே அலங்காரமாக இருக்கிறது இந்த மண்டபம். மண்டபம் கடந்தால், வாயிலின் இருபுறமும் திண்ணைகள் இருக்கின்றன. நிலைவாசல் கதவே கோயிலின் பழமையையும் அதன் இன்றைய நிலைமையையும் பறைசாற்றுகிறது. இங்குள்ள அலர்மேல்வள்ளித் தாயார் சர்வ அலங்காரங்களுடன் சிரித்த முகமாக தரிசனம் தருகிறாள். வேண்டிய வரங்களை அருள்வதில் இவளுக்கு இணை இல்லை.  
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் இளைஞன் ஒருவன், குதிரை ஒன்றின் மீது அமர்ந்த வண்ணம் அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள், மலைகள் போன்றவற்றை ரசித்தவாறே வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்தனர். குதிரையை இவ்வளவு நிதானமாக நடத்திக்கொண்டு வருவதைப் பார்த்தால், அவன் ஒரு போர் வீரனாக இருக்க முடியாது. இயற்கையை இவ்வளவு ஆர்வமாக ரசிக்கிறான். அதோடு அவனது கண்கள் சதா கற்பனை கலந்த கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதைப் போன்றே இருப்பதைப் பார்த்தால் அவன் ஒரு கவி புனைபவனாகவோ அல்லது கதை எழுதுபவனாகவோ இருக்கலாம். அவன் செல்லும் பாதை மதுரையம்பதியை நோக்கி இருக்கிறது! சொன்னார் ஒரு பெரியவர். அப்பகுதியில் இருந்த கோயில் பட்டர் ஒருவர், கையில் குடம் ஒன்றுடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த வாலிபன், குதிரையில் இருந்து இறங்கி அவரைப் பின் தொடர்ந்தான். கொஞ்சதூரம் சென்ற பட்டாச்சாரியார், குளம் ஒன்றின் கரையில் நின்றார். இளம் சூரியனின் கிரணங்கள்பட்டு குளத்து நீர் தகதகவென ஜொலித்துக் கொண்டு இருந்தது. சூரியனைக் கண்ட தாமரை மலர்கள் சந்தோஷத்தில் மொட்டிலிருந்து முகிழ்ந்து முகம் மலர்ந்து கொண்டிருந்தன. குளத்தில் விழுந்த வாலிபனின் பிம்பத்தை நிலவென்று நினைத்து அல்லி மலர்கள், தாமும் மலர ஆரம்பித்தன. அனைத்தையும் ரசித்தபடி மெய் மறந்து நின்ற வாலிபனை, பட்டரின் குரல் நனவுலகத்துக்கு அழைத்து வந்தது. யார் நீங்க? என்ன விஷயமா வந்திருக்கீங்க? எங்கே போகணும்?

எதுவும் சொல்லாமல் அவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான் அந்த இளைஞன். அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் ஏதோ தன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதுபோல் இருந்தது பட்டருக்கு. இறைவனின் திருமஞ்சனத்திற்காக குளத்து நீரைக் குடத்தில் நிரப்பிக் கொண்டவர், பக்கத்தில் இருந்த பெருமாள் கோயிலுக்குள் நுழைந்தார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற வாலிபன், நீண்ட நேரம் நடந்த பூஜையில் லயித்து நின்றான். வெகுநேரம் பூஜைகள் செய்தார் பட்டர். பின், பிரசாதத்தை நிவேதனம் செய்துவிட்டு, கொஞ்சத்தை அந்த இளைஞனிடம் தந்தார். அவர் கொடுத்த பிரசாதத்தை மன நிறைவோடு பெற்றுக் கொண்ட இளைஞன், மறுபடியும் பட்டரைப் பார்த்துச் சிரித்தான். புறப்பட்டான். அப்போதுதான், தன் கேள்வி எதற்கும் அவன் பதில் சொல்லாதது நினைவுக்கு வர, அவனைக் கூப்பிடத் திரும்பினார் பட்டர். ஊஹூம்..மாயமாய் மறைந்திருந்தான் அந்த இளைஞன். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது, வந்தவன், சாதாரண மனிதன் அல்ல. மாயங்கள் நடத்துவிக்கும் அந்தத் தூயவனே மானுட உருவில் வந்து சென்றிருக்கிறான் என்பது. அப்பனே என்று அழைத்துத் தேடியதால், எம்பிரானின் திருப்பெயருக்கு முன் அப்பன் எனும் வார்த்தை சேர்ந்து கொண்டது. அப்பன் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆனார், இங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரைத் திருவிழாவின் போது அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வரும் வழியில் இங்குள்ள மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்குவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.