Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சீதளா தேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சீதளா தேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சீதளா தேவி
  அம்மன்/தாயார்: சீதளா தேவி
  ஊர்: மடிப்பாக்கம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இங்கு தினந்தோறும் விசேஷம் தான்.அதிலும் குளிர்ந்தநாயகிக்கு, பவுர்ணமியன்று மிகவும் சிறப்பாகவும் நவராத்திரி மற்றும் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில், விசேஷ அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சீதளா தேவி, 64 வகையாக உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய, சகல விதமான நோய்களையும் அழிப்பதுடன், பக்தர்கள் தான் விரும்பும் வரத்தை தரக்கூடிய தயாநிதியாக விளங்குகிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு சீதளா தேவி திருக்கோயில், 152, 5வது குறுக்கு தெரு, குபேர் நகர் விரிவாக்கம், மடிப்பாக்கம், சென்னை – 600 091.  
   
போன்:
   
  +91 44 2258 1345, 98414 14174 
    
 பொது தகவல்:
     
  சீதளா தேவி ஜுரம், காலரா, சரும நோய்கள், ரத்த சம்பந்தப்பட்ட சகல நோய்களையும் உண்டாக்கும். அசுர கூட்டங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பதால், அவளுடைய பக்தர்களுக்கு, மேற்கூறிய நோய்களும் மற்றும் இதர 64 வகையாக உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய, சகல விதமான நோய்களையும் அழிப்பதுடன், பக்தர்கள் தான் விரும்பும் வரத்தை தரக்கூடிய தயாநிதியாக விளங்குகிறாள். சீதளா தேவியானவள், கன்னிகா ஸ்வரூபிணியாக திகழ்பவள். அவள் தன் தலையில் முறத்தை மகுடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தத்தை கொண்டவளாகவும், வேப்பிலையை கொண்டவளாகவும் விளங்குகிறாள். வேப்பிலை ஆயுர்வேத சித்தா வைத்தியத்தில், ஓர் முக்கியமான மருந்து பொருளாக உள்ளது, அவள் எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடியவள் என்பதை நிரூபிக்கிறது.

சீதளா தேவியானவள் காத்யாயனி என்றும் தாய் என்றும் அழைக்கப்படுகிறாள். காத்யாயனி என்றால், சகல சக்திக்கும் அதிபதியானவள் என்று பொருள். அவள் தன் குளிர்ந்த பார்வையால், மக்களுக்கு வரும் நோய்களை தீர்க்கிறாள். ஜுவராசுரன் என்ற அரக்கன், ஒரு சமயம் குழந்தைகள் மீது விஷகிருமிகளை பரவ விட்டு, அதன் மூலம் குழந்தைகளுக்கு அம்மை, வைசூரி, காலரா மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்களை பரப்பிய போது, தாயான  சீதளா தேவி, தன் கருணையால் அனைத்து வியாதிகளையும் போக்கி, உலகை ரசித்து அருளினாள். இதன் காரணமாக, அனைத்து மக்களும் அவளை, தாய் என்று போற்றி வழிபடுகின்றனர். கோயிலின் வடக்கு திசை நோக்கி சீதளா அம்மன், பிள்ளையார், பால முருகனும், கிழக்கு திசையை நோக்கி, சுவர்ண மகாலட்சுமி,  ராகு, கேதுவும், மேற்கு திசையை நோக்கி வீர ஆஞ்சநேயரும், தென் திசையை நோக்கி தென்முகக்கடவுள் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வந்து சீதளாம்பிகையை வணங்கி, பிணி நீங்கி இன்பமாக வாழ்கின்றனர். இந்த கோயிலுக்கு வந்து வணக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப்பிரசவம் ஏற்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு வஸ்திரம் சாற்றுகின்றனர்.  
    
 தலபெருமை:
     
  மிருகண்டு புராக்தம் என்ற பழைமையான ஏடுகளில், சீதளா ஸஹஸ்ரநாமம், திரிசதி மற்றும் அஷ்டோத்திரம் உள்ளன. வடமாநிலங்களில் சீதளாம்பிகையை, சீதல் மாதா என்று வழிபட்டனர். தன்னுடைய பக்தர்களுக்கு வரும் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்களை நீக்கி, உடலையும், மனதையும், சீதளா தேவி அம்மன், குளிர வைக்கிறாள். தமிழ்நாட்டில், மாரியம்மன் என்றும் மழைக்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறாள்.

தினமும் ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை போன்ற பூஜா முறைகளை, மிக சிறப்புடன் உலக மக்கள் நலனுக்காகவும், பக்தி சிரத்தையுடன் செய்து வருவதால், இன்று இந்த ஊர் மிகவும் புகழ்வாய்ந்து, தினமும் பல நூறு மக்கள் அம்மனின் அருள்பெற்று, சவுக்கியமாக வாழ்கின்றனர் என்றால், அது சீதளா தேவியின் கருணையால் தான். மிகவும் அழகே உருவான தெய்வீக மணத்துடன், பக்தர்களின் துயர் துடைக்க காட்சி தரும் அம்பிகையின் பேரழகு காண, கண்கோடி வேண்டும். இந்த கோயிலுக்கு வந்து வணக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப்பிரசவம் ஏற்படுவதால், வைத்தியரிடம் செல்வதற்கு பதில், ஒரு முறையாவது இந்த கோயிலிற்கு சென்று, அம்பிகையின் அருள்பெற்று, நோயற்ற ஆனந்த வாழ்வும், சர்வ மங்களங்களும் பெற்று, பல்லாண்டு வாழ்வீர்கள் என்பது இது சத்தியவாக்கு.
 
     
  தல வரலாறு:
     
  சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளா தேவிக்கு பல பெயர்கள் இருக்கின்ற போதும், வட நாட்டில் சீதள் என்றும், தென் மாநிலங்களில் மாரி, மஹா மாரி, மாரியம்மன், எல்லையம்மன், கருமாரி, சீதளா தேவி, அமிர்த் வர்ஷினி என்றும், பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். சீதளா தேவி, பார்வதி அம்மனுடன் ஒப்பிட்டு வழிபடுகின்றனர். இந்த தேவியின் வழிபாட்டை தந்த்ர சாஸ்திரத்திலும், புராணங்களிலும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. சீதளா தேவியை, வசந்த ருது என்று அழைக்கப்படும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில், உலகத்தின் ராணியாக விழா எடுத்து கொண்டாடப்படுகிறாள்.

சீதளா தேவி கருணை உடையவளாகவும், மங்கல ரூபிணியாகவும், தயாநிதியாகவும், அருள்பாலிப்பவளாகவும், தன்னை வேண்டி வழிபாடு நடத்தும் பக்தர்களிடம், இரக்க குணம் உள்ளவளாகவும் விளங்குகிறாள். ஒரு சமயம், அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணி, அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியரின் உதவியுடன், ஆபிசார பிரயோகம் என்ற தீய சக்தியான, ஏவல் வினைகளை பயன்படுத்தினர். இதனால், தேவர்கள் கடுமையான வெப்பம் காரணமாக, உடலில் வைசூரிக் கொப்புளங்களுடனும், ஜுரத்துடனும், உடல்வலியுடன் அவஸ்தைப்பட்டனர். ஆனால், இதற்கு வைத்தியம் எதுவும் பலனளிக்க இயலாதபடி, ஜுர உபாதையுடன் கஷ்டத்தை அனுபவித்தனர். தேவர்களே ஆனாலும், துயரம் வரும்போது இறைவனின் பாதகமலங்களையே  நாடுகின்றனர். அப்படி தேவர்கள் கயிலைநாதனின் தாள் பணிந்து, தாங்கள் படும் அவஸ்தையில் இருந்து காக்கும்படி வேண்டினர்.

தேவர்களின் துயர் துடைக்க, செவிச் சாய்த்த சாம்பசிவனின் சடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும், பேரொளி ஒன்று தோன்றியது. அதுவே, புவனம் காக்கும் புவனேஸ்வரியின் ஒரு அம்சம். சீதளாம்பிகை என்ற திருநாமத்துடன், தேவர்களின் நலனுக்காக, பரமேஸ்வரனின் அருளுடன் தோன்றினாள். நித்யமான மந்திரங்களை அனைவருக்கும் கண்டுபிடித்து, வெளிப்படுத்துவரை ரிஷி என்பர். அப்படி மந்திரங்களை வெளிப்படுத்துவதில், சிறந்த மகாதேவனே, சீதளாஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தினை கூறி, சீதளாதேவியை வழிப்பட்டால், அனைத்து விதமான ரோகங்களில் இருந்து (வெப்பம் காரணமாக வரும் வைசூரி போன்ற) விடுபட்டு, நிம்மதி கிடைக்கும் என்று அருளினார். முறத்தினால் அலங்கரிக்கப்பட்ட சிரசும், குடமும், துடப்பமும் கையிலேந்தி, கழுதை வாகனத்தில் காட்சி தருவதாகவும், சீதளாஷ்டகத்தில் பரமேஸ்வரன் கூறுகிறார். பரமேஸ்வரனின் சிரசின் (தலையில்) உள்ள குளிர்ச்சியான சந்திரனும், கங்கையும் கொண்ட அம்சமான சீதளாம்பிகை, மிகவும் சூளுமையானவள். குழந்தை முதல் முதியவர் வரை, அனைவரும் சீதாளஷ்டகத்தை கூறி வணங்கினால், நோயின்றி வாழலாம். லலிதா ஸஹஸ்ர நாமத்தில், சீத்தளாயை நமஹ என்ற வருகிறது. இதுவே அம்பிகையின் பெருமையை உணர்த்தும்.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் வழங்கும் அம்பிகை, தமிழகத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சை பூந்தோட்டம், செதலப்பதி திருவிடைமருதூர் ஆகிய தலங்களில், காட்சி தருகிறாள். சென்னையை அடுத்த திருமழிசையில், குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில், ஈஸ்வரனுடன் அருள்பாலிக்கிறார். அன்னை சீதாளம்பிகை ராகவன் குருஜீ என்பவரின்  கனவில் வந்து, தமிழகத்தில்  தனக்கென்று ஒரு தனிக்கோயில் எழுப்ப உத்தரவிட்டாள். அந்த பாக்கியம், தருமமிகு சென்னைக்கு கிடைத்தது. கடந்த 2002ம் ஆண்டு, பார்வதி தேவியின் அவதாரமான மகாசக்தி சீதளா தேவியின் கோயிலை, பார்வதி தேவியின் பரம பக்தரும், வித்யா உபாசகருமான, குருஜி ராகவன் (சீதளா சுவாமிகள்), தாய் சீதளா தேவி, ராகவன் குருஜீ என்று அழைக்கப்படும், சீதளா பட்டாரகருக்கு ப்ர்த்யசஷ்யமாகி, தனக்கு மடிப்பாக்கத்தில் உள்ள குபேர நகர் என்ற இடத்தில் கோயில் நிர்மானிக்க உத்தரவு கொடுத்ததின் பேரில், மேற்படி சீதளா பட்டாரகர் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்த குபேர நகரில், 2003ம் ஆண்டு ஆனி உத்திரத்தன்று, கோயிலை முழுவதும் கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்து, கட்டியுள்ளார். இப்படி பெருமை வாய்ந்த,  கோயில் நகரமான நங்கநல்லூருக்கு அருகில் உள்ள மடிப்பாக்கத்தில், ராகவன்  குருஜியின் பெருமுயற்சியால், மிகவும் போற்றுதற்குரிய சீதளாம்பிகை கோயில் எழுப்பப்பட்டு உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சீதளா தேவி, 64 வகையாக உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய, சகல விதமான நோய்களையும் அழிப்பதுடன், பக்தர்கள் தான் விரும்பும் வரத்தை தரக்கூடிய தயாநிதியாக விளங்குகிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.