Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: உக்ரகதலி லட்சுமி நரசிம்மர்
  உற்சவர்: ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்
  அம்மன்/தாயார்: செங்கமலவல்லி
  தல விருட்சம்: வில்வமரம்
  தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
  ஊர்: தம்மம்பட்டி
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பௌர்ணமி விழாவும், ஏகாதசியில் திருமஞ்சனமும், பிரதி சனிக்கிழமை இங்கு நெய் விளக்கு போட்டால் சகல தோஷ நிவர்த்தியாகும். சுவாதி மற்றும் பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  கர்ப்பகிருஹத்தில் மூலவர் சுயம்பு கதலி ஸ்ரீ நரசிம்மர் சங்கு சக்கர அபய கரத்துடன் திருமகளை தன் மடியின் மீது அமர்த்தி ஆலிங்கன திருக்கோலத்துடன் தாமரை பீடத்தின் மீது அமர்ந்து, லட்சுமி நரசிம்மராக கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு உக்ர மூர்த்தியாக காட்சி தருகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 – 12.00 மணி வரை மாலை 5.00 – 8.00 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், தம்மம்பட்டி, கெங்கவல்லி, சேலம்  
   
போன்:
   
  +91 94436 10871 
 
பிரார்த்தனை
    
  இத்தலத்து பெருமாளை  மனம் உருகி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிப்பட்டால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். மீளாத துயரமும், தீராத கடனும் நீங்கும். 
    
 தலபெருமை:
     
  பெரிய திருவடியாம் கருடன் ஒரே நேர்க்கோட்டில் மூலவரின் நாபியை நோக்கிய வண்ணம் அமைந்திருப்பது வெகு சிறப்பானது.
வில்வ விருட்ச்சத்தை சுற்றி சகல ஐஸ்வர்யங்களையும் தரும் அஷ்ட லட்சுமிகளும் அங்கே நம்மை ஆட்கொள்ள காத்திருக்கின்றனர். வீரம் மற்றும் பராக்கிராமம் கிடைக்க இங்குள்ள விஷ்வக்சேனர் அருள் புரிகிறார்.

இத்திருக்கோயிலின் முகப்பில் 41 அடி உயர ஆஞ்சநேயர், விநாயகர் சன்னிதிகள் உள்ளன.  மேலும் மகா மண்டபத்தில் பன்னிரெண்டு ஆழ்வார்கள், உடையவர் ஸ்ரீ இராமனுஜர், ஸ்ரீ தேசிகன் மற்றும் கூரத்தாழ்வர் காட்சி தருகின்றனர். ஞானத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்கீரிவர் பேரழகோடு காட்சி தருகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த திருத்தலம், மலைவாழ் மக்களின் வியாபார தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளை பொருட்களான காய்கள், வாழைப்பழம் முதலான கனிகள் மற்றும் வாசனாதி திரவியங்களை விற்று வந்தனர். அவர்களுள் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் கதலிபழம் (வாழைப்பழம்) தொடர்ந்து காணாமல் போகவே, அந்த ஊர்  தலைவரிடம் சென்று முறையிட்டாள். அவரும் ஊர் மக்களை கூட்டி விசாரிக்கிறார். மூன்று நாட்களாகியும் இதே போல் கதலி பழம் காணாமல் போகவே பெருமாளை வேண்டுகிறார்.

அன்றிரவு அப்பெரியவர் கனவில ஸ்ரீமந் நாராயணன்  தோன்றி காணாமல் போன வாழைப்பழத்திற்க்கு தானே காரணம் என்றும், தன் ரூபத்தை வெளிப்படுத்தவே வந்ததாகவும், அவர்கள் தங்கும் இடத்தில் கதலி வடிவத்தில் சுயம்பு  மூர்த்தியாக தான் இருப்பதாகவும், தனக்கு அங்கே ஆலயம் எழுப்புமாறு கூறி மறைந்தார். நான்காம் நாள் காலை அந்த பெரியவர் மறுபடியும் தன் ஊர் மக்களோடு பெருமாள் கனவில் கூறிய இடத்தில் தேடி பார்க்கையில்,  கதலி (வாழைப்பழ)  வடிவ சுயம்புவாக ஸ்ரீமந் நாராயணன் காட்சி கொடுத்தார். நான்காவது நாள் சுயம்பு மூர்த்தி கிடைத்தால், தசாவாதாரத்தில் நான்காவது அவதராமன நரசிம்மமூர்ததியின் அம்சமாக அங்கே அந்த சுயம்பு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தனர் அவ்வூர் மக்கள். பின் நாட்களில் அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் மங்கள வடிவத்ததை அமைத்தும் வழிபட்டு வருகின்றனர்.

அதனால் கருவறையின் நேராக செல்லாமல், வடக்கு வாசல் வழியாக சென்று மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். கர்ப்பகிருஹத்திற்க்கு எதிரே பெருமாளை வணங்கிய வண்ணம் மேற்கு நோக்கிய கருட சன்னிதியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் அருள் புரிகிறார். உள் பிரகாரத்தில் ஸ்ரீசக்ரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார். சீதா சமேத ஸ்ரீ இராம லக்ஷ்மண ஆஞ்சநேயர், குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ணர், பிணிகளை போக்கும் தன்வந்திரி மற்றும் ஆண்டாள் சன்னிதிகளும் உள்ளன.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கர்ப்பகிருஹத்தில் மூலவர் சுயம்பு கதலி நரசிம்மர் சங்கு சக்கர அபய கரத்துடன் திருமகளை தன் மடியின் மீது அமர்த்தி உக்ர மூர்த்தியாக காட்சி தருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.