Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வாசுதேவ பெருமாள்
  உற்சவர்: ராஜகோபால சுவாமி
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூமா தேவி,(செங்கமல வல்லி) உற்சவர்: பாமா, ருக்மணி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  ஊர்: அனந்தமங்கலம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அனுமன் ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அமாவாசை, மற்றும் பெருமாளுக்குரிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம் - நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4364 - 289 888, 256 221 
    
 பொது தகவல்:
     
 

மூலவர் வாசு தேவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கின்றனர். தனி சன்னதியில் செங்கமல வல்லி தாயார்.முன்மண்டபத்தின் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.




 
     
 
பிரார்த்தனை
    
  அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் அவை நீங்க அனுமனை பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இது பெருமாள் கோயிலாக இருந்தாலும் அனுமார் மிகவும் சிறப்புடையவர் என்பதால் இதை அனுமன் தலமாக வணங்கு கின்றனர்.

இங்குள்ள ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்களும் இருப்பதாக கோயில் வரலாறு கூறுகிறது. இதனால் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் ஆஞ்சநேயருக்கு அந்தக் கிரகத்துக்குண்டான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
 
     
  தல வரலாறு:
     
  இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் உயிருடரன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதற்காக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,'' என்றார்.உடனே ராமன்,"" மகரிஷியே! தாங்கள் கூறியபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும் படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது' என்றான் ராமன். இதற்கெல்லாம் சரியான நபரான அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புவோம் என கூறினார். அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தை கொடுத்தனுப்பினார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழுவைத்தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தான். கிருஷ்ணனின் வெண்ணை இடது கையில் உள்ளது. கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தான். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். கடைசியாக அங்கு வந்த சிவன், தனது சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணை (நெற்றிக்கண்) அனுமனுக்கு தந்தார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து விட்டு அயோத்தி திரும்பினார்.திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. இது நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar