Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குமரன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குமரன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மெய்கண்டமூர்த்தி
  ஊர்: நாகப்பட்டினம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  அருணகிரிநாதர்  
     
 திருவிழா:
     
  வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூச 10 நாள் திருவிழா, ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி) குபேரருக்கு பூஜை.  
     
 தல சிறப்பு:
     
  மயிலுக்குப் பதிலாக யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு குமரன் திருக்கோயில், நீலா தெற்கு வீதி நாகப்பட்டினம் மாவட்டம்-611 001.  
   
போன்:
   
  +91 99941 98391, 94429-29270 
    
 பொது தகவல்:
     
  விநாயகர், குபேரன், துர்க்கை, நவக்கிரகங்கள், விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சன்னதிகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று.
 
     
 
பிரார்த்தனை
    
  தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்க கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.


தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான், இதை அடையாளமாக மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாலயத்தில் குபேரர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.


 
     
  தல வரலாறு:
     
  இந்தக் கோயிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். அழகுமுத்து மெய்க்காப்பாளராக பணியாற்றிய இந்தக் கோயிலில், முருகனுக்கு "மெய்கண்டமூர்த்தி' என்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில் என்றானது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மயிலுக்குப் பதிலாக யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar