Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுவர்ணபுரீஸ்வரர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: சுகந்த குந்தளாம்பிகை
  தல விருட்சம்: வன்னி, வில்வம்
  தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காவேரி
  ஆகமம்/பூஜை : காரண ஆகமவதிப்படி பூஜை
  புராண பெயர்: இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி
  ஊர்: செம்பொனார்கோவில்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் பாடல் பெற்றது.

தேவாரப்பதிகம்

மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபொன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 42வது தலம்.

 
     
 திருவிழா:
     
  சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும், 9 நாள் பெருந்தேர் விழாவும் "சவுரமகோற்சவம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  செம்பொனார் கோவில், சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொன்பள்ளி-609309. செம்பொன்னார்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-99437 97974 
    
 பொது தகவல்:
     
 

லட்சுமி, திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான்.எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.


 
     
 
பிரார்த்தனை
    
 

எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார். குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.


 
    
நேர்த்திக்கடன்:
    
  நமக்கு எது வசதியோ அதன் படி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்ளலாம். குறிப்பாக வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் தான் சிவபெருமான் வீரபத்திரராக தோன்றுகிறார். ரதி, மன்மதனை தன் கணவனாக அடைந்தது“இத்தல இறைவனை வழிபட்டு தான். வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம் மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர். இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு, புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார் குழலி என்ற திருநாமங்களும் உண்டு. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.
 
     
  தல வரலாறு:
     
 

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறார்.


தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்று வித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.தாட்சாயிணியும், சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவனும் தாட்சாயிணியை மன்னித்து சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.