Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலட்சுமிபுரீஸ்வரர்
  அம்மன்/தாயார்: உலகநாயகி, லோகநாயகி
  தல விருட்சம்: வில்வம், விளமாம்
  தீர்த்தம்: நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம்
  புராண பெயர்: திரிநின்றஊர், திருநின்றியூர்
  ஊர்: திருநின்றியூர்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  தேவாரப்பதிகம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்.
 
     
 திருவிழா:
     
  ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.பழைய மாடகோயில், பிறகு மாற்றி கட்டியதாக சொல்லப்படுகிறது. எப்படி ஈசனுக்கு இப்பெயர் வந்தது என ஆதாரம் இல்லை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் - 609 118. நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4364 - 279 423 ,320 520, +91- 94861 41430. 
    
 பொது தகவல்:
     
  கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது.

தலவிநாயகர்: செல்வகணபதி. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன், இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப்போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா? எனக் கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது, சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே கோயில் எழுப்பி வழிபட்டார்.

திரி அணைந்த தலம் என்பதால், "திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் "திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் "பரசுராமலிங்க'மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன்  "ஜமதக்னீஸ்வரராக' சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை "நீலமலர் பொய்கை' என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
 
     
  தல வரலாறு:
     
  மகரிஷியான ஜமதக்னி, தன் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினான். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தான்.

தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.

மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் "மகாலட்சுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar