Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர்
  அம்மன்/தாயார்: பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை
  தல விருட்சம்: மருதமரம்
  தீர்த்தம்: காருண்யமிர்தம், காவேரி
  புராண பெயர்: மத்தியார்ச்சுனம்
  ஊர்: திருவிடைமருதூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்
தேவாரப்பதிகம்

பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.
 
     
 திருவிழா:
     
  தை மாதம் - தைப்பூசம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - தினந்தோறும் காலையும் மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கும். 10 ம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடையும். வைகாசி மாதம் - வசந்த உற்சவ பெருவிழா - 10 நாட்கள் திருவிழா - திருக்கல்யாண உற்சவம், அம்பாள் தபசு, அம்பாள், தன்னைத்தானே உற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறும். திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர்மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.இந்தியாவிலேயே ொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் - 612 104. தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 435- 2460660. 
    
 பொது தகவல்:
     
  தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலுள் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை "" பஞ்ச லிங்கத்தலம்' எனறும் சொல்வர். இத்தல விநாயகர் ஆண்டகணபதி எனப்படுகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர்.

அதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு.

மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பால் , தயிர்,பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம்,விபூதி,மா பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.

மூகாம்பிகை: கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூல லிங்க தலம்: ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் , சேய்ஞலூர்-சண்டேசுரர் , சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள், சிதம்பரம்-நடராஜர் , சீர்காழி-பைரவர், திருவாவடுதுறை-திருநந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
 
பட்டித்தாரும் பத்திரகிரியாரும்:  பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை.,இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம். மகாலிங்கப் பெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த சிறப்புடைய தலம். வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது. அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர், சொக்கநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான். பட்டினத்தார்,பத்திரகிரியார்,வரகுணபாண்டியன், அருணகிரிநாதர்,கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்ற பெருமையுடையது.

பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.
 
     
  தல வரலாறு:
     
  அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார்.இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே.

நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தலவரலாறு கூறுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar