Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பட்டினத்தார்
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: வங்காளவிரிகுடா
  ஊர்: திருவொற்றியூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை.  
     
 தல சிறப்பு:
     
  பட்டினத்தார் முக்தி தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர்-600 019. சென்னை.  
   
போன்:
   
  +91- 98402 84456 
    
 பொது தகவல்:
     
 

சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம். மலர்பந்தல் போட்டு வழிபாடு செய்கின்றனர்.


 
     
 
பிரார்த்தனை
    
 

பட்டினத்தாரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பதும்,பொருட்கள் மீதான ஆசை குறையும் என்பதும் நம்பிக்கை.


 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியபின்பு, பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பட்டினத்தாருக்கு சிவபூஜை: வங்காளவிரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. ராஜகோபுரம், விமானம் கிடையாது. இங்கு பட்டினத்தார் தனிச்சன்னதியில் கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இவர் லிங்க வடிவில், சதுரபீடத்துடன் காட்சி தருகிறார். நாகாபரணமும் சார்த்தப்பட்டுள்ளது. இவரை சிவனாகவே கருதி பூஜை செய்யப்படுவது சிறப்பம்சம். இவருக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. சன்னதி எதிரில் நந்தியும், முன்மண்டபத்தில் விநாயகர், முருகன் இருக்கின்றனர். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.

பட்டினத்தாரின் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். எனவே ஒவ்வொரு மாத உத்திராடத்தின் போதும், வியாழக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது பழங்களை நைவேத்யமாக படைத்து பூஜை செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் இங்கில்லை!: பட்டினத்தார், சிவனருள் வேண்டி குடும்பத்தைப் பிரிந்து துறவியாக வந்தவர். எனவே இவரிடம் வேண்டிக்கொள்பவர்கள் நேர்த்திக்கடனாக இந்த பொருளை செலுத்துகிறேன் என்று வேண்டுவதில்லை. பக்தர்கள் இவரிடம் கோரிக்கையை மட்டும் சொல்லி வணங்கிச்செல்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறினால் தாங்கள் விரும்பியதை நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள். ஏதேனும் உபகாரமாக நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லி வேண்டினால், அந்த செயல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் உள்ளது.

பட்டினத்தார் சன்னதி நுழைவுவாயில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபடுபவர்கள் பணிவாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இவரது சன்னதி முகப்பில் 27 நட்சத்திர தீபம் உள்ளது. இதில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியையே, பிரசாதமாக தருகிறார்கள். இதனை உட்கொண்டால் பிணி நீங்குவதாக நம்பிக்கை. குபேரனே, பூலோகத்தில் சிவதரிசனம் செய்வதற்காக பட்டினத்தாராக பிறந்ததாக சொல்வர். ஆகவே இவரிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார்.

இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார்.

திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. இங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.