Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: எழுத்தறிநாதர்
  அம்மன்/தாயார்: நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்
  தல விருட்சம்: செண்பகமரம், பலா
  தீர்த்தம்: ஐராவத தீர்த்தம்
  புராண பெயர்: திருஇன்னம்பூர், திருவின்னம்பர்
  ஊர்: இன்னம்பூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

தேவாரப்பதிகம்



சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.



-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 45 வது தலம்.



 
     
 திருவிழா:
     
  நவராத்திரி 10 நாட்கள், சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கல்வி அபிவிருத்தியை தரும் ஸ்தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 45 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 435 200 0157, 8610244175 
    
 பொது தகவல்:
     
  கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி.

வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  * நவராத்திரி காலத்தில் இவ்வாறு செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இக்கோயிலில் அர்ச்சனை செய்தால் நல்வாக்கு பெறுகிறார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுகிறது. *

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை "நித்தியகல்யாணி’ என அழைக்கின்றனர். மற்றொரு அம்பாளான "சுகந்த குந்தல அம்பாள்’ தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். இது சூரியன் பூஜித்த தலமாகும்.

"இன்னன்’ என்றால் "சூரியன்’ என பொருள். "இன்னன் நம்பூர்’ என பெயர் இருந்து "இன்னம்பூர்’ என மாறிவிட்டது. பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ""ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன்,சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு "எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. "அட்சரம்' என்றால் "எழுத்து'. இது சுயம்புலிங்கம் என்பதால் "தான்தோன்றீயீசர்' என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் ஆக இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு "இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் " இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு "இன்னம்பூர்' என்று மாறிவிட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
விஞ்ஞானம் அடிப்படையில்: லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar