Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குந்தளேஸ்வரர்
  அம்மன்/தாயார்: குந்தளாம்பிகை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: கணபதி நதி
  புராண பெயர்: திருக்கரக்காவல்
  ஊர்: திருக்குரக்கா
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்

ஆல நீழல் அமர்ந்த அழகனார் காலனை உதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞை களாலும் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே..

-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.
 
     
 திருவிழா:
     
  சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் , திருக்குரக்கா-609 201, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4364 - 258 785. 
    
 பொது தகவல்:
     
 

பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், கோஷ்டத்தில் வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.


 
     
 
பிரார்த்தனை
    
 

கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணி வித்தும்நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

சிவ ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார்.  அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும், "சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.


சிறப்பம்சம்: அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.


 
     
  தல வரலாறு:
     
 

சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.


சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் "குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar