61. மஹாதேவேந்த்ரர் 4 |
|
காலம் |
: |
கி.பி, 1704 முதல் 1746 (42 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : குரோதன வருஷம் ஜேஷ்ட சுக்ல நவமி. திருவொற்றியூர் ஸித்தி, 61 வது ஆசார்யாள் முதல் 70 வது ஆசார்யாளான ஸ்ரீசங்கரவிஜயேந்த்ரர் வரை புண்யஸ்லோக மஞ்ஜரியின் தொடர்ச்சி ஸ்ரீஸ்ரீக்ருஷ்ண ப்ரேமிஸ்வாமிகளால் செய்யப்பட்டது. |
62. சந்த்ரசேகர ஸரஸ்வதி 5 |
|
காலம் |
: |
கி.பி. 1746 முதல் 1783 (37 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : முகமதியர்களால் காஞ்சிபுரத்தில் கலவரம் உண்டாயிற்று. கர்நாடக தேசம் அவர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகையால் ஆசார்யாள் பங்காரு காமாக்ஷியை எடுத்துக் கொண்டு, சோழதேசம் புறப்பட்டார். உடையார்பாளையம் ஜமீன், அணக்குடி ஜமீன்தாரால் கொஞ்ச நாள் பாதுகாக்கப்பட்டு வந்தது, பிறகு தஞ்சையை ஆண்ட ராஜாப்ரதாபஸிம்ஹன், தஞ்சை மே வீதியில் கோயில் கட்டி, பங்காரு காமாக்ஷியை ப்ரதிஷ்டை செய்து நித்ய பூஜை நடக்க ஏற்பாடு செய்தார்.
ஸ்வாமிகள் அதற்கு மேல் கும்பகோணத்தையே முக்கிய ஸ்தானமாகக் கொண்டு வசிக்கலானார். காஞ்சி மடத்திலும் காரியதரிசிகள் இருந்து கவனித்து வந்தனர்.
சுபக்ருத் வருஷம் புஷ்யமாஸம் க்ருஷ்ணபக்ஷ த்விதியையில், கும்பகோணத்திலேயே ஸ்வாமிகள் மஹாஸமாதி அடைந்தார்கள். |
64. சந்த்ர சேகரேந்த்ரர் 6 |
|
காலம் |
: |
கி.பி. 1814 முதல் 1851 (37 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : இவர் ஐம்புகேச்வரத்தில் (திருவானைக்காவல்) தாடங்கப்ரதிஷ்டையும் யந்த்ரப்ரதிஷ்டையும் செய்தார். காஞ்சி காமாக்ஷிதேவியின் கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். ஸாதாரண வருஷம் கார்த்திகை க்ருஷ்ண த்விதீயையில், கும்பகோணம் மடத்திலேயே ஸித்தியடைந்தார்.
|
66. சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி7 |
|
அவதரித்தது |
: |
உடையம் பாக்கம் |
காலம் |
: |
கி.பி. 1891 முதல் 1908 (17 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பராபவ வருஷம் மாக க்ருஷ்ண அஷ்டமி. கலவை என்ற கிராமத்தில் மஹாஸமாதி அடைந்தார். |
68. ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகள் |
|
அவதரித்தது |
: |
விழுப்புரம் |
காலம் |
: |
13.01.1907 முதல் 08.01.1994 வரை |
முக்தி திதி, தேசம் : அபாரகருணாஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி, ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்த்ரிகள் என்ற கர்நாடக ப்ராமண தம்பதியினருக்கு, விழுப்புரம் என்ற ஊரில் 20-5-1894ல் இரண்டாவது குமாரனாக ஸ்வாமிநாதன் பிறந்தார். ஸ்வாமிநாதன் சிறுவயதில் திண்டிவனத்தில் ஆங்கில பள்ளியில்தான் படித்தார். படிக்கும்போது மஹாபுத்திசாலியாகவும் படிப்பில் முதல் தரமாகவும் தேர்ச்சி பெற்று வந்தார்.
ஸ்வாமிநாதன் அடிக்கடி காஞ்சி சங்கரமட 66 வது பீடாதிபதி ஸ்ரீசந்த்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகளைப் போய் தரிசிப்பது உண்டு. ஆசார்யாளுக்கு இந்தப் பையனுக்குத்தான் ஸந்யாஸம் கொடுக்க சங்கல்பமிருந்தது. சிறுவனான ஸ்வாமிநாதனுக்கும் அதில் ஆர்வம் இருந்தது ஆச்சர்யம்.
தனது 13வது வயதில் காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள கலவை கிராமத்தில் தனது பரமகுரு, குரு இருவரும் விதேஹ கைவல்யம் என்ற ஸித்தியை அடைந்து விட்டதால், ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதீஸ்வராளாக ஸ்வயமேவ ஸந்யாசாஸ்ரமத்தை ஸ்வீகரித்துக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது. இது 13.2.1907ல் கலவையில் நடைபெற்றது. ஸ்வாமிநாதன் சந்த்ரசேகரேந்தர ஸரஸ்வதி என்ற பெயருடன் ப்ரகாசித்தார். பல ஸன்யாஸியான இவர் மறுபடியும் ஆசிசங்கரரே வந்து விட்டதாக காட்சி தந்தார்.
ஸ்வாமிகள் ஸகல வேத சாஸ்த்ரங்களையும் அத்யயனம் செய்து, ஸந்யாஸ தர்மத்தில் திடமாக இருந்து கொண்டே, வேளை தவறாமல் பக்தி ச்ரத்தையுடன் ஸ்ரீசந்த்ரமவுலீஸ்வரரை பூஜித்துக் கொண்டும், நித்யோபவாஸியாய் மஹாதபஸ்வியாய், மஹாயோகியாய், மஹா ஞானியாய் அடிக்கடி மவுனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டும் மஹாதேஜஸ்வியாய் குரு பீடத்தில் எழுந்தருளியிருந்தார்.
ஆஸேதுஹிமாசலம் பாத யாத்ரையாகவே திக்விஜயம் செய்தார். நம் பாரத பூமியில் பெரியவாள் கால்படாத இடமே இல்லை. சாஸ்வதமான ஸனாதனமான வர்ணாஸ்ரமத்தை நிலை நாட்டினார். ஜாதி, மத பேதமில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் அருள் பாலித்தார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காந்திஜி முதலிய த்யாகிகளை பாராட்டி உற்சாகமளித்தார். பாரததேசம் சுதந்திரம் அடைந்ததையும் கண்டுகளித்தார்.
மற்றமடாதிபதிகளிடமும், மற்ற ஸித்தாந்திகளிடமும், மற்ற மதத்தினரிடமும் பொறாமையே அற்றவர். அவரவர் வழியில் அவரவர் இருக்க வேண்டும் என்று பெருந்தன்மையுடன் உபதேசிப்பார் நாஸ்திகர்களிடமும் கிருஸ்துவர்களிடமும், முகமதியர்களிடமும் கூட இரக்கமுள்ளவர். சண்டாளர்களையும் கிட்டே அழைத்து விபூதிப்ரஸாதம் கொடுத்து சிவநாமம் சொல்லச் சொல்லுவார்.
எப்பொழுதும் சிரித்த முகமாக யாவருடைய ப்ரார்த்தனையும் கேட்டு அபயம் கொடுப்பார். ஸ்வாமிகளுக்கு கோபமே வராது. அபசாரங்களை ஸகித்துக் கொள்வார். எல்லோருக்கும் அம்மாவாகவும், அப்பாவாகவும், குருவாகவும், தெய்வமாகவும் இருப்பார். ஸம்ஸாரிகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும், ஆசார்யாளின் தரிசனமே நிம்மதி அளிக்கும்.
உலகில் சர்வ ஜனங்களாலும் மஹா பெரியவாள் என்று கொண்டாடப்பட்டவர், மஹாபெரியவாளின் கருணைக்கு எல்லையே இல்லை. மனிதாபிமானத்தில் பெரியவாளுக்கு நிகர் யாருமில்லை. நம் பெரியவாள் த்ரிகால ஞானி. நடமாடும் தெய்வம் என்று போற்றப்பட்டவர்.
தன்னிடம் வந்து முறையிடும் எளியவர்களுக்கும், ஏழை பக்தர்களின் சிரமங்களை தானே தெரிந்து கொண்டும், தக்க சமயத்தில் அவர்களுக்கு பொருளுதவி செய்ய ஏற்பாடு விடுவார்கள். சிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே உதவி செய்து அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு. அப்பேர்ப்பட்ட வள்ளல்பெருமான் நம் ஆசார்யாள்.
1954ல் ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதிக்கு ஸந்யாசம் கொடுத்து விட்டு வார்திக்ய காலத்தில் மடத்தைவிட்டு விலகி கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்த்ரா முதலிய மாநிலங்களில் பாதயாத்ரை யாகவே திக்விஜயம் செய்து எண்ணற்ற கிராமங்களையும் ஊர்களையும் பவித்ரமாக்கிக் கொண்டு வந்தார்.
1978 முதல் ஆரம்பித்து 1984 வரை சஞ்சாரம் செய்த விஜய யாத்திரையில் பரம பவித்ரமான பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பண்டரீபுர க்ஷேத்ர பாதயாத்ரை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
87 வருஷங்கள் மடாதிபதியாக இருந்த காலத்தில் மஹாஸ்வாமிகள் செய்த தர்மகாரியங்கள் கணக்கிலடங்காதவை. ஸ்ரீசைலம், காசி, அலகாபாத், கயா, பூரிஜகந்நாதம் முதலிய இடஙகளில் ஸ்ரீசங்கரமடம் நிர்மாணம், சதாராவில் உத்தரசிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுவித்தார். பல இடங்களில் வேத பாடசாலைகளும், அநேக ப்ரஸ்டுகளும் ஆரம்பித்தார். காஞ்சியில் 108 சிவன் கோயில்களில் பலவற்றை கண்டுபிடித்து கோயில்கட்டி, நித்ய பூஜைக்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீகாஞ்சி காமாக்ஷிக்கு வெள்ளி ரதம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கை பிரதிஷ்டையும் செய்தார். வேத ஸம்ரக்ஷணத்துக்காக ட்ரஸ்டுகள் மற்றும் அநேக தர்மகார்யங்களுக்கான நிரந்தர ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
மஹாஸ்வாமிகளின் தரிசனத்துக்காக வந்த ப்ரமுகர்கள் கணக்கிலடங்காதவை. ராஷ்ட்ரபதிகள், கவர்னர்கள், பிரதம மந்திரிகள், முக்கிய மந்திரிகள், ராஜாக்கள், அரசகுடும்பத்தினர், வெளிநாட்டு அரசர்கள், மடாதிபதிகள், ஆன்மீக தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல துறைகளிலும் உள்ள வல்லுநர்கள் அடங்குவர். பெரியவாள் பல தடவைகள் பல இடங்களில் வித்வத்ஸதஸ் நடத்தியிருக்கிறார்கள்.
1968ல் தனது சரீரஸ்திதியை உத்தேசித்து ஸ்ரீமடம் நிர்வாகம் முழுமையும் ஸ்ரீ புதுப்பெரியவாளிடம் ஒப்படைத்து விட்டு தாம் ஒரு பரிவ்ராஜக ஸந்யாஸியாக வாஸம் செய்து வந்தார்கள். பிறகு பக்தர்களின் ப்ரார்த்தனையால் 1984ல் மறுபடியும் காஞ்சிபுரம் வந்து 100 வயது வரை ஸ்ரீமடத்திலேயே பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்து கொண்டிருந்தார்கள்.
மஹாஸ்வாமிகள் பவ வருஷம், மார்க் சீர்ஷ, க்ருஷ்ணபக்ஷத்வாதசியில் 8-1-1994 அன்று ஸ்ரீமட வளாகத்திலேயே ப்ரஹ்மத்துடன் ஐக்யமானார்கள்.
பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோர் கண்களில் நீர்மல்க தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினார்கள். பிரதம மந்திரி பி.வி. நரஸிம்மராவ் மற்றும் முக்கிய ப்ரமுகர்களும் வந்திருந்தனர்.
நம் மஹாஸ்வாமிகள் ப்ரஹ்ம ஞானி, மஹாதபஸ்வி, ஜீவன் முக்தர், மஹா யோகி, ஸ்ரீஸ்ரீஸ்வாமிகள் மறைந்து விட்டாலும் அதிஷ்டானத்தில் இருந்து கொண்டு காண வரும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் குறைகளை தீர்த்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பக்தர்கள் அதிஷ்டானத்தை தரிசித்தும் ப்ரதக்ஷிணம் செய்தும், பெரியவாள் அருளுக்கும் அனுக்ரஹத்துக்கும் பாத்திரமாகலாம். மஹாபெரியவாள் தானே பரப்ரம்மமாகி எங்கும் நிறைந்து இன்றும் நம்மைக் காப்பாற்றி வருகிறார்கள்.
மஹாஸ்வாமிகளின் மறைவுக்குப்பின், அவருடைய மஹத்துவத்தையும், வைபவத்தையும், அவர் பல பக்தர்களுக்கு அருள் புரிந்ததைப் பற்றியும் ப்ரஸங்கங்கள் மூலமாகவும், டி.வி. மூலமாகவும் தெரிந்து கொள்கிறோம்.
மேலும் “பெரியவா தர்சன அனுபவங்கள்” என்று தலைப்பில் அநேக புஸ்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.
குரும் ப்ராகாசயேத் சிஷ்ய: என்றபடி ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாபெரியவாளின் மஹிமையையே மூச்சுக்கு மூச்சு எங்கும் பேசி வருவது நாமறிந்ததே.
ஜயஜய சங்கர ஹரஹர சங்கர |
63. மஹாதேவேந்த்ரர் 5 |
|
அவதரித்தது |
: |
கும்பகோணம் |
காலம் |
: |
கி.பி.1783 முதல் 1814 (31 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : இவர் காசியாத்ரை கிளம்பினார். வேலையாட்கள் சிஷ்யர்கள் 500 பேர், 25 மாட்டு வண்டிகள் குதிரைகள், ஒட்டகங்கள், 3 யானைகள், 10 பல்லக்குகள் சகலராஜோபசார பரிவாரங்களுடன் யாத்ரை புறப்பட்டார். யாத்ரை முடிந்து வருவதற்குள் கும்பகோணம் மடம் திருப்பணி முடிந்து தயாராக இருந்தது. இவர் மிகப்ரஸித்தியாக இருந்தார்.
ஆசார்யாள் ராஜகுருவாகவும் ஜகத்குருவாகவும் விளங்கினார் இவர் ஸ்ரீமுக வருஷம் ஆஷாட சுக்ல த்வாதசியில் கும்பகோணத்தில் முக்தி அடைந்தார். |
65. சுதர்சன மஹாதேவேந்த்ரர் 6 |
|
அவதரித்தது |
: |
திருவிடைமருதூர் (மத்யார்ஜுனம்) |
காலம் |
: |
கி.பி. 1851 முதல் 1891 (40 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : இவர் பாரததேசம் எங்கும் திக்விஜயம் செய்தார். பாண்டிய நாட்டில் ஸஞ்சரிக்கும் போது இளயாத்தங்குடி என்ற ஊரில் மஹா சமாதி அடைந்தார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இவருக்கு ஒரு கோயில் கட்டி ச்ரத்தையாக பூஜை நடத்தி வருகிறார்கள். மஹாபெரியவாள் இங்கே பல வருஷம் தங்கியிருந்தார். பால்குண மாதம் அமாவாசை திதியில் ஆராதனை நடக்கிறது. |
67. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி 6 |
|
அவதரித்தது |
: |
காஞ்சிபுரம் |
காலம் |
: |
1908 (7 நாட்கள் ) |
முக்தி திதி, தேசம் : பராபவ வருஷம் பால்குனசுக்ல ப்ரதமை கலவையில் மஹா ஸமாதி அடைந்தார். 66வது, 67 வது ஆசார்யார்கள் வைசூரி போட்டு மறைந்துவிட்டனர். பிறகு திண்டிவனத்தில் படித்துக் கொண்டிருந்த ஸ்வாமிநாதனை அடுத்த பீடாதிபதியாக்க நினைத்து மடத்து நிர்வாகிகள் அவரை அழைத்து வந்தனர். காஞ்சிபுரம் வந்ததும், மேனேஜர், ஸ்வாமிநாதனை மாட்டு வண்டியில் கலவை கிராமத்துக்கு அழைத்துப் போனார். அப்பொழுது இரண்டு பெரியவாளும் ஸித்தியாகியிருந்தார்கள். மேனேஜர், ஸ்வாமி நாதனிடம், உமக்குத்தான் ஸந்யாஸம் கொடுப்பார்கள் போலும் என்று சொல்லவே, ஸ்வாமிநாதன் வண்டியிலிருந்து இறங்கி கலவையை நோக்கி 4 தடவை வந்தனம் செய்து விட்டு வண்டியில் ஏறினாறாம். |
69. ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் |
|
அவதரித்தது |
: |
சாத்தனூர் |
காலம் |
: |
03.01.1994 முதல் 28.02.2018 வரை |
முக்தி திதி, தேசம் : சாத்தனூரில் இருந்த மஹாதேவய்யர், ஸரஸ்வதி தம்பதியினருக்கு 1935 ஆம் வருஷம் ஜூலை 18, ஆடிமாதம் அவிட்ட நக்ஷத்ரத்தில் பிறந்த முதல் குழந்தைக்கு ஸுப்ரமணியன் என்று பெயர் வைத்தனர். ஸுப்ரமணியன் திருவிடை மருதூரில் வேதாத்யனனம் செய்து வந்தார். மஹா பெரியவாள் ஸுப்ரமணியனை பார்த்த உடனேயே இவர் அடுத்த பீடாதிபதியாக இருக்கப் பிறந்தவர் என்று ஞானத்திருஷ்டியால் தெரிந்து கொண்டு, தனது ஸங்கல்ப்பத்தை மஹாதேவய்யரிடம் தெரிவிக்கச் செய்தார்.
ஸுப்ரமணியனும் நான் ஸந்யாஸம் தான் பெறப் போகிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். அவருக்கு அப்பொழுது வயது 18.
22.3.1954 அன்று மஹா பெரியவாள் முன்னிலையில் ஸுப்ரமணியனுக்கு ஸந்யாஸம் நடைபெற்றது. அநேக பக்தர்கள் கூடியிருந்து இந்த வைபவத்தைப் பார்க்கும் பாக்யம் பெற்றனர். ஸ்நயாஸம் பெற்ற பிறகு ஜயேந்த்ர ஸரஸ்வதி என்று பெயர் பெற்றார்.
மஹாஸ்வாமிகளின் கூடவே இருந்து, ஆச்ரமதர்மங்களை நழுவாமல் அனுஷ்டித்துக் கொண்டும், ஸ்ரீசந்த்ரமவுலீஸ்வர பூஜையை செய்து கொண்டும், வேதாந்த ச்ரவணம் செய்து கொண்டும் வருகிற பக்தர்களுக்கு ப்ரஸன்னமான முகத்துடன் அனுக்ரஹம் செய்து கொண்டும் இருக்கிறார்.
ஆசார்யாளின் அனுமதி பெற்று பாரததேசத்தில் குமரி முதல் பத்ரி வரை பாதயாத்ரையாகவே திக் விஜயம் செய்தார். காலடி, ராமேஸ்வரம், ப்ரயாகை, காசி முதலிய ப்ரதானமான இடங்களில் ஆதிசங்கரரின் நினைவு மண்டபங்களை எழுப்பினார்.
பல கலாசாலைகளையும், பள்ளிக்கூடங்களையும் வைத்யசாலைகளையும் ஏற்படுத்தி ஜனங்களுக்கு சேவை செய்ய ஏற்பாடு செய்தார். ஜாதி மத பேதமின்றி ஏழைகளுக்கு மருத்துவம், கல்வி, திருமணத்துக்கு பொருளுதவி செய்ய வேண்டி ஜன கல்யாண் என்ற ஸ்தாபனத்தை நிறுவினார்.
காஞ்சிபுரத்தில் 14 வயது ஆன சங்கரநாராயணசர்மாவுக்கு ஸ்வாமிகள் 29-5-1983 அன்று ஸ்நயாஸம் கொடுத்து அவர் ஸ்ரீசங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி என்ற பெயர் பெற்றார். பால பெரியவாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பொருளாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருந்த காஞ்சி சங்கரமடத்தை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை ஸ்ரீஜயேந்த்ரருக்கே உண்டு.
குருவிடம் திடமான பக்தியுள்ளவர். எனவே குருவின் சதாப்தி மஹோதஸவத்தை வெகு விமரிசையாக கொண்டாடினார்.
குருவின் சரிதத்தையும் உபதேசங்களையும் உலகமறியச் செய்தார். வேதாந்த ஸித்தாந்த நிர்த்தாரணம் செய்வதற்காக ஜகத்குரு வித்யா பீடத்தையும் காசியில் ஸ்தாபித்தார். சங்கர பாஷ்யத்துக்கு குருப்ரியா என்ற விவரணத்தையும் செய்து வெளியிட்டிருக்கிறார்.
அநேக கோயில் கும்பாபிஷேகங்களையும் நடத்திவைத்திருக்கிறார்.
இவ்வாறு அநேக லோக க்ஷேமார்த்தமான காரியங்களைச் செய்து கொண்டு எங்கும் புகழுடன் நமது ஸமகாலத்தில் ஆசார்யாள் எழுந்தருளியிருப்பது நாம் செய்த பாக்யம்.
ஆன்றோர் வாக்கின்படி ‘குருவருள் இல்லையெனில் அறிவோ, திறமையோ, எடுத்தகாரியத்தில் ஸித்தியோ அல்லது முக்தியோ கூட கிடைக்காது’ முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனாக ஸ்ரீகாமகோடி பீட பக்தர்களான நமக்கு ஸ்ரீசரணர்களின் திருவடி ஸம்பந்தம் பெற்ற பாக்யத்தினால் இந்த நான்கும் கிடைத்துவிட்டது என்றே பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.
ஸ்ரீசரணர்களின் சரணாரவிந்தங்களில் பணிவுடன் நமஸ்கரித்து அவர்களின் ஆசியையும், அருளையும் பெறுவோம். அவர்கள் நீடூழி காலம் இருந்து நம்மை அனுக்ரஹிக்க அன்னை காமாக்ஷியை ப்ரார்த்திப்போமாக.
(சித்தியடைந்தார் - காஞ்சிபுரம் மடம் உள்ள அதிஷ்டானம்)
ஜயஜயசங்கர ஹரஹரசங்கர |
70. ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் |
|
அவதரித்தது |
: |
தண்டலம் |
காலம் |
: |
28.02. 2018ம் ஆண்டு முதல் - |
முக்தி திதி, தேசம் : பால பெரியவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீசங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 13.3.1969 ஆரணி என்ற ஊருக்கு அருகிலுள்ள தண்டலம் என்ற ஊரில் க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்திரிகளுக்கும் அம்பாலக்ஷ்மிக்கும் தெலுங்கு ப்ராமண குடும்பத்தில் அவதரித்தார். பூர்வாஸ்ரம பெயர் சங்கர நாராயணசர்மா.
போளூரில் காஞ்சி சங்கரமடத்தால் நடத்தப்படும் வேதபாடசாலையில், இவருடைய தந்தை ஸ்ரீக்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளே ரிக்வேத அத்யாபகராக இருந்ததால், அவரிடமே ரிக்வேதம் அத்யயனம் செய்தார். பிறகு அல்லூரில் யக்ஞேஸ்வர சாஸ்த்திரிகளிடம் லீலாவதி கணிதம் கற்றார்.
காஞ்சிபுரத்தில் அனந்தஸரஸ் என்கிற புண்ய தீர்த்தக் கரையில் 14 வயது ஆன சங்கரநாராயண சர்மாவுக்கு ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 29-5-1983 அன்று ஸ்யாஸம் கொடுத்தார். அப்பொழுது பல தண்டிஸந்யாசிகளும் பல பக்தர்களும் கூடியிருந்தனர் அவர்கள் இந்த வைபவத்தைப் பார்க்கும் பாக்யம் பெற்றனர். ஸ்யாஸம் பெற்ற பிறகு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி என்று பெயர் பெற்றார்.
அந்த சமயம் ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் பாதயாத்ரை செய்து கொண்டு ஆந்த்ராவில் கர்னூலில் 21-6-1983 அன்று ப்ரவேசித்தார்கள். புதுப்பெரியவாளுடன், பாலபெரியவாளும் கர்னூல் அருகே முகாமில் இருந்தார்கள். மஹாபெரியவாள் ப்ரதோஷத்தன்று பாலபெரியவாளை வரவேற்க ஏற்பாடுகள் செய்யும்படி மடத்து சிப்பந்திகளுக்கு சொன்னார்களாம். அவர் வரும்பொழுது மல்லிகை பூவை கூடை கூடையாக அவர் சிரஸில் போடச் சொல்லியும், 108 தேங்காய் சதுர்காய் போடவும், நிறைய வேஷ்டிகள் வாங்கி அவர் வந்ததும் த்ருஷ்டி சுத்தி வேஷ்டிகளை பல்லக்கு தூக்கிக் கொண்டு வரும் போகி ஆட்களுக்கு வீசி விடவும், சொல்லியிருந்தாராம்.
மேலும் ஸ்வஸ்திவாசனம் சொல்லி அழைத்து வரச்சொன்னாராம்.
மாலை 7-30 மணி அளவில் பாலபெரியவாள் மஹாஸ்வாமிகள் தங்கியிருந்த மில்வாசலுக்கு வந்தவுடன் மேளவாத்யத்துடன், பூர்ணகும்பம் கொடுத்து மஹாபெரியவா சொன்னபடி வரவேற்று ஸ்வஸ்தி ஸுக்தம் சொல்லி மஹா பெரியவாளிடம் அழைத்து வந்தார்களாம்.
ப்ரதோஷ பூஜை முடிந்ததும் பாலபெரியவாள் மஹா பெரியவாளை வந்தனம் செய்து கொண்டார்கள். மஹாஸ்வாமிகள் சில நிமிடங்கள் பாலபெரியவாளை பார்த்த பிறகு, சில சம்பாஷணைகளும் நடந்தன.
24-7-1983 அன்று கர்னூவில் வ்யாஸபூஜை நடந்தது. 3 பெரியவாளும் சேர்ந்து செய்த முதல் வ்யாஸ பூஜை அது.
பிறகு 1984ல் காஞ்சிபுரம் வந்தவுடன், பாலபெரியவாள் மஹாஸ்வாமிகளுடனும் ஸ்ரீஜயேந்த்ரஸ்வாமிகளுடனும் கூட இருந்து ஆஸ்ரம தர்மங்களை நழுவாமல் அனுஷ்டித்துக் கொண்டும், ஸ்ரீசந்த்ரமவுளீஸ்வரர் பூஜையை செய்து கொண்டும் வேதாந்த ச்ரவணம் செய்து கொண்டும் இருந்தார்.
பாலபெரியவாள் சாந்தஸ்வரூபம். இவர் அணுகுவதற்கு ஸௌலப்யமானவர். வருகிற பக்தர்களிடம் பரிவும் அன்பும் கலந்த விசாரணை செய்வார். பக்தர்களுக்கு எப்பொழுதும் ப்ரஸன்னமான முகத்துடன் அனுக்ரஹம் செய்து கொண்டு வருகிறார்.
தர்மத்தை ரக்ஷிக்க பற்பல ஸத்கார்யங்களை செய்து கொண்டு வருகிறார். பக்தர்களையும் ஸத்காரியங்களில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.
நமது ஸ்ரீமடத்தில் ஸ்ரீசரணர்களால் தர்மம் போற்றப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும், வருகிறது. ஸம்ஸாரி ஜீவர்களை கரையேற்றக் காத்திருக்கும் ஓடம் போன்ற ஸ்ரீசரணர்களின் திருவடியைப் போற்றி வணங்குவோம். அவர்கள் நீடுழி காலம் இருந்து நம்மை அனுகிரஹிக்க அன்னை காமாட்சியை பிராத்திப்போமாக.
புண்யஸ்லோகர்களாகிய குருவை நினைப்பதே மிகவும் புண்ணியமாகும். |
|
|
|
|