Special supplement · Part 2 · page 50 · 106 / 159
அஷ்டதிக் கஜங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், சிற்பங்கள் என ஒவ்வொன்றும் சிறப்பு மிக்கவை. இக்கோயிலில் கருவறையை இந்திரன் வடிவமைத்ததாக புராணங்கள் சொல்கின்றன. கருவறை, விமானங்களை அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு திக்கு யானைகள் தாங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் இந்திரனின் ஐராவதம், தென்கிழக்கில் அக்னி தேவனின் புண்டரீகன் என்ற யானைகள் உள்ளன. தெற்கு திசையை குறிக்கும் எமனின் வாமனன், தென் மேற்கு திசையை காக்கும் நிருதியின் குமுதன், சுவாமி சன்னதி மேற்குபக்கம் அஞ்சனன், வடமேற்கு நோக்கி புஷ்பதந்தன், சுவாமி சன்னதி வடக்கு பக்கம் துர்கை அம்மன் சன்னதி அருகே வடக்கில் சார்வபவுமன், வடகிழக்கில் சுப்ரதீகன் என எட்டு திக்குக்கும் யானைகள் எழுந்தருளியுள்ளன.
— எம்.ஆர்.பாபு, மதுரை · 90805 76155