Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 52 · 108 / 159

கிளியிடம் சொல்வோம்

மீனாட்சியின் நிறம் பச்சை. அவள் கருணையும், அருளும் ஒருங்கே அமைந்த வடிவமானவள். பக்தர்கள் அழைத்தவுடன் ஓடோடி சென்று அருள்புரிய தயாராக இருக்கிறாள் மீனாட்சி. அதன் அடையாளமாக வலது காலைச் சற்று முன்னோக்கி வைத்து காட்சி தருகிறாள். அவள் கையில் ஏந்தியிருக்கும் கிளி கலைகளின் சொரூபமாகும். மேலும் அந்தக் கிளியானது, பக்தர்கள் கூறும் கோரிக்கைகளை கவனமாக கேட்டு, மீனாட்சியிடம் சொல்லிக் கொண்டே இருக்கும். திரும்ப திரும்ப சொல்லும் இயல்பு கொண்டதுதானே கிளி. இப்படி பக்தர்கள் ஒரு தடவை தங்களது வேண்டுதலை கூறினாலும், அதை திரும்ப திரும்ப மீனாட்சியிடம் சொல்லி அதை நிறைவேற்றித் தருகிறது கிளி.

Advertisement
Advertisement
Top
Advertisement