Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 63 · 129 / 159

கன்னத்தை கிள்ளியவள்

பாண்டியநாட்டிலுள்ள திருப்பூவனம் என்னும் சிவத்தலத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்தாள்.

சிவபக்தையான அவள் பூவனநாதருக்கு தங்கச்சிலை அமைக்க விரும்பினாள். இதை நிறைவேற்ற எண்ணி, திருநீறு பூசிய மேனியுடன் சித்தர் கோலத்தில் சிவனே நேரில் வந்தார். அவளது வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை எல்லாம் தீயில் இட்டால் பொன்னாக மாறும் என்றும் வாக்களித்து மறைந்தார். அதன்படி அவை பொன்னாக மாறியது. அவளும் அதில் சுவாமி சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் மயங்கி அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள். அவளது நகக்குறியை திருப்புவனத்தில் உற்ஸவர் சிலையில் இன்றும் காணலாம். இந்த கோலத்தை தரிசித்தால் செல்வம் பெருகும். நினைத்தது நிறைவேறும்.

Advertisement
Advertisement
Top
Advertisement